கற்பழிப்பு

பெதும்பை, மங்கையின் ஆடைதான் கற்பழிப்புக்கு வழிவகுக்கிறது என்றால் !
பேதை என்ன செய்தாள் ?
தெரிவை என்ன செய்தாள் ?

பேசும் பேச்சு உனக்கு இச்சை தூண்டுகிறது என்றால் !
ஊமை பெண் என்ன செய்தாள் ?

பழகும் விதம் உனக்கு இச்சை தூண்டுகிறது என்றால் !
மனநலம் இல்லாத பெண் என்ன செய்தாள் ?

பெண்ணின் நடையும், நடனமும் உணர்ச்சி எழுப்புகிறது என்றால் !
ஊனப் பெண் என்ன செய்தாள் ?

உன் பார்வையிலும்,
எண்ணத்திலும் இச்சை கொண்டு பெண்ணை பார்ப்பதற்கு
பெண் ஏன் தண்டனை பெறுகிறாள் ?

நீ இழைத்த தவறுக்கு,
உனக்குத் தையல் பொரியும் !
அவளுக்கு வாய்க்கு அரிசியும் !

அவள் உன் மனைவி ஆயினும்,
அவள் பாரத்தை ஆயினும்,
அவளின் விருப்பம் இன்றி தொடுதல் அழகற்றது.

தன் வீடு முதல் சாலை வரையிலும்,
தன் பள்ளி வகுப்பறையிலும்,
விடுதியிலும்,
ஓடும் பேருந்திலும்,
காவல் நிலையத்திலும்,
வழிபாட்டுத்தலத்திலும்,
பகலிலும் இரவிலும்,
கருவிலும் பிறப்பிலும் பாதுகாப்பின்றி தவிப்பதே பெண்ணுக்கிட்ட சாபம் போல.

இந்நாட்டில் எத்துணையோ பெண் கடவுள்களை வழிபட்டாலும்
நதி அனைத்திற்கும் பெண்ணின் பெயரைச் சூட்டினாலும்
பெண்ணை என்னென்ன சொல்லிக் கவுரவித்தாலும்
பூ பூப்பதற்குள் பறித்துத் தூக்கி வீசுவதை போல தான் நம் நாட்டுப் பெண்களின் நிலை.

சிலையாய் இருப்பினும் ,
நதியின் மணலாய் இருப்பினும் ,
இவற்றைப் போலப் பெண்ணையும் சூறையாடுகின்றன..

அரைகுறை ஆடையில் ஒரு பெண்,
நீ பார்க்கவேண்டியதோ அவள் கண்,
மாற்றவேண்டியதோ உன் எண்ணம்,
இதுவே கற்பழிப்பு என்பதைக் குறைக்கும்.

பிணம், ஆடு, நாய் என்று பாராமல்
புணர்தலுக்கு அலையும் மனிதமிருங்கள் உள்ள வரையில்,
கற்பழிப்பை அறவே அளிக்க இயலாது .

எழுதியவர் : தாஜீதீன் (4-Oct-20, 5:56 pm)
சேர்த்தது : தாஜீதீன்
Tanglish : karpazhippu
பார்வை : 53

மேலே