காலத்தின் கோலம்

நிலவைக் காட்டி
சோறூட்டினாள் அன்றைய தாய்
நிலவை கையில் கொடுத்து
சோறூட்டுகிறாள் இன்றைய தாய்
கைப்பேசி மூலமாக

தாயின் தாலாட்டு கேட்டு
உறங்கியது அன்றைய குழந்தை
சிறு தூக்க மாத்திரையோ
அல்லது
கைப்பேசி இசையைக் கேட்டோ
உறங்கிவிடுகிறது இன்றைய குழந்தை
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (5-Oct-20, 3:44 am)
Tanglish : kaalaththin kolam
பார்வை : 174

மேலே