தேவா கிருஷ்ணமூர்த்தி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : தேவா கிருஷ்ணமூர்த்தி |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 15-Nov-1994 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 05-Feb-2020 |
பார்த்தவர்கள் | : 75 |
புள்ளி | : 4 |
உணர்வுகளின் வாரிசு வரம் தரும் வரிகள்... எனக்கு கிடைத்த வரன்கள் ஏராளம் ..
அழுக்கு சட்டையை விரும்பிப்போடும் பேராசைக்காரன்,
பணியில் உடல்நலம் குறைந்தாலும் வீடு வர மறுக்கும் பிடிவதாக்காரன்,
காலனி அணியாமல் காலுக்கு பலநாள் விடுமுறை தரும் தாரளக்காரன்,
கைக்குட்டையை வியர்வையில் துவைக்கும் சாமர்த்தியசாலி,
மழையடித்தாலும் மிதிவண்டியில் நிமிர்ந்து ஓட்டும் மழை விரும்பி பின்னால் நான் இருப்பதால்,
செந்நீர் கரத்தில் வடிந்தாலும் துணியால் மறைத்து பணிசெய்யும் மந்திரக்காரன்,
கேட்ட பொருளை வாங்கவில்லையெனில் நான் தூங்கியபிறகு வீட்டுக்கு வரும் ஏமாத்துதக்காரன்,
பசி கண்ணை கட்டினாலும்
நான் சாப்பிட்டு முடிக்கும்வரை தனக்கு பசிக்கவில்லை என கூறும் புழுகுமூட்டை...
.
இவ்வளவு ஏன்..!
நண்ப
காமத்தையும் தாண்டி கணக்கில் அடங்கா காதலை மட்டும் கொண்டிருந்தேன்,
உன்னை சுற்றியுள்ளவர்களுக்கு புரிந்தும், உன்னக்கு ஏன் புரியவில்லை?
நெருங்கியது உன் தவறா? இல்லை நம்பியது என் தவறா?
மலையும் மலிவா போச்சு,
எம்மக்களும் தனியா போச்சு,
மச்சான் நீ என்கூட இருந்தா....
உலகும் உருகிப் போச்சு,
எரிகுழம்பும் ஒரஞ்சி போச்சு,
டேய் மாமானு நீ சொல்லும்போது ....
எவனும் எதிர்க்க முடியாது,
தொட்டவனும் திரும்ப முடியாது,
மச்சான் நீ என் கூட இருந்தா....
அம்மான்னு நீ கூப்பிட,
அக்கான்னு நான் கூப்பிட,
செல்ல சண்டை நமக்குள்ள ரெண்டுத்துக்கும் ஒரே அர்த்தம்னு தெரியாம...
பெத்த புள்ள நான் இருக்க,
எங்கம்மா உன்ன முத்தமிடும் உன் கண்ணத்துல,
கோபம் வந்தாலும் நானும் முத்தமிட்டன் உன் மறு கண்ணத்துல....
தொப்புள் கொடி உறவ விட,
தாய் மாமண் பாசக்கொடி உறவு ரொம்ப பெருசு,
பெத்தப்புள்ள எத்தன வந்தாலும
பிறக்கும் அரசு மருத்துவமனையில் ஆரம்பித்து,கட்டை வேகும் சுடுகாடு வரை பணம்....
கோவில் வரிசையில் நிற்பதில் ஆரம்பித்து, கோவில் வாசலில் ஏந்தும் கைகள் வரை பணம்....
இனிக்கும் உறவில் ஆரம்பித்து, கசக்கும் உறவு வரை பணம்....
நல்ல நண்பன்டா , கஞ்ச பயன்டா சொல்லும் வரை பணம்...
வந்து நில்லுங்க நீங்க, கொஞ்சம் தள்ளி நில்லுங்க வரை பணம்...
மொத்தத்தில் பணம்....பணம்...பணம்..
வளைந்து நெளிந்து நீண்டு புரண்டு ஓடும் அந்த நதியை கடத்தி வருவேன் நீ முகம் தெளிக்க...!!
ஓங்கி உயர்ந்து பல வேர்களை பாய்த்து வளரும் அந்த மரங்களை பெயர்த்து வருவேன் நிழலில் நீ நடக்க...!!
சுழன்று சுழன்று பல தடைகளை உடைத்து முன்னேறும் சூறாவளியை சிறைபிடிப்பேன் நீ காற்று வாங்க..!!
சுட்டெரிக்கும் அந்த சூரியனை சிறு பெட்டிக்குள் அடைத்து தருவேன் உன் கூந்தல் காய வைக்க..!!
நடு நடுங்கவைக்கும் சிங்கத்தையும் உன் சிம்மாசனமாக்குவேன் நீ கம்பீரமாக இருக்க...!!
இது போதவில்லை என்றால், நீ தலையசைத்தால் என் இதய ஓசையை உன் இரவின் தாலட்டுக்குவேன்...!!
.
.
அடியே...!!
உன் தந்தையும் நான்,
உன் தோழனும் நான்,
உன் சிற்பி