தங்கை அன்பு

வளைந்து நெளிந்து நீண்டு புரண்டு ஓடும் அந்த நதியை கடத்தி வருவேன் நீ முகம் தெளிக்க...!!
ஓங்கி உயர்ந்து பல வேர்களை பாய்த்து வளரும் அந்த மரங்களை பெயர்த்து வருவேன் நிழலில் நீ நடக்க...!!
சுழன்று சுழன்று பல தடைகளை உடைத்து முன்னேறும் சூறாவளியை சிறைபிடிப்பேன் நீ காற்று வாங்க..!!
சுட்டெரிக்கும் அந்த சூரியனை சிறு பெட்டிக்குள் அடைத்து தருவேன் உன் கூந்தல் காய வைக்க..!!
நடு நடுங்கவைக்கும் சிங்கத்தையும் உன் சிம்மாசனமாக்குவேன் நீ கம்பீரமாக இருக்க...!!
இது போதவில்லை என்றால், நீ தலையசைத்தால் என் இதய ஓசையை உன் இரவின் தாலட்டுக்குவேன்...!!
.
.
அடியே...!!
உன் தந்தையும் நான்,
உன் தோழனும் நான்,
உன் சிற்பியும் நான்....
என் கரம் இருக்கும்வரை உன்னை விடமாட்டேன், என் சிரம் இருக்கும்வரை எவரையும் உன்னை தொடஅனுமதிக்கமாட்டேன்...!!
.
.
செல்லமே...!!
நீ என் அன்புக்கு உரியவள்,
நீ என் காதலுக்கு உரித்தானவள்,
நீ பாசத்திற்கு உரிமை உள்ளவள்,
உன் அண்ணன் எங்கு இருந்தாலும் தங்கை உன்னை என் மனதில் தாங்கி நிற்பேன்,
எத்துணை முறை விரட்டினாலும் என் பாதை முடியும் இடம் உன் காலடி மட்டுமே,
எதற்கு என்று கேட்காமல் உன்னை காதலிக்கிறேன்,
எவ்வளவு என்று யோசிக்காமல் நீ தாங்க முடியா அன்பை கொட்டி வருகிறேன்...!!
ஏன் இத்துணை நாள் உன் முகம் பார்க்க,
இன்றே பலித்தது உன்னிடம் நான் வரம் கேட்க..!!!
என் அன்பின் மொத்த உறுவமடி நீ,
என் உயிரின் மொத்த கலவையும் நீ,
என்றும் என்னுடன் இரு ,
எதற்கும் என் மனதுடன் உரையாடு...!!
உனக்குள் நான்,
உனக்காக நான்....!!!
என்றும் காதலுடன்-
உன் அண்ணன் தமிழன் தேவா...

எழுதியவர் : தேவா கிருஷ்ணா (5-Feb-20, 11:07 am)
Tanglish : thangai anbu
பார்வை : 82

மேலே