காதல்

எகிப்திய பேரழகி ,கிளியோபாட்ரா ,
அவளைக் கண்டான் காதல் கொண்டான்
ரோமானிய சக்ரவர்த்தி ஜூலியஸ் சீசர்
மாவீரன் அவன் அவள் கண்ணழகில் மயங்கி
அவள் காலடியில் .........
கிளியோபாட்ரா நிறத்தால் கார்முகிலாள்
ஆனால் கடைந்தெடுத்த பேரழகு சிற்பமென
உலகமே மதி மயங்கிய இயற்கையின் படைப்பு
நிறத்திற்கு அப்பாற்பட்டது காதல்
சரித்திரமே இதற்கு அத்தாட்சி

எழுதியவர் : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (5-Feb-20, 9:35 am)
Tanglish : kaadhal
பார்வை : 208

மேலே