நேசம் சுமந்தே பிரியட்டும்

எங்கேனும் கேட்கும் உன் நாமத்தின் உச்சரிப்பு
எதிர்பாராது சில முகங்களில் உன் சிரிப்பு
எட்டிப் பார்க்கும் சிலர் ஆண்மையின் செருக்கு
எங்கிருந்தோ வரும் உன் வாசத்தின் ஈர்ப்பு
ஏகாந்தத் தனிமையில் உன்நினைவுகளால் தவிப்பு....
காதல் பிரவாகத்தில் என்னை துளிர்க்கும்
ஜீவன் அதில் சிலிர்த்து மீண்டும் உயிர்க்கும்

கடக்கும் நாட்கள் என்றும் இப்படியே கடக்கட்டும்
என்கடைசி மூச்சும் உன் நேசம் சுமந்தே பிரியட்டும்.....

எழுதியவர் : வை.அமுதா (5-Feb-20, 7:17 am)
பார்வை : 182

மேலே