அப்பா

அழுக்கு சட்டையை விரும்பிப்போடும் பேராசைக்காரன்,
பணியில் உடல்நலம் குறைந்தாலும் வீடு வர மறுக்கும் பிடிவதாக்காரன்,
காலனி அணியாமல் காலுக்கு பலநாள் விடுமுறை தரும் தாரளக்காரன்,
கைக்குட்டையை வியர்வையில் துவைக்கும் சாமர்த்தியசாலி,
மழையடித்தாலும் மிதிவண்டியில் நிமிர்ந்து ஓட்டும் மழை விரும்பி பின்னால் நான் இருப்பதால்,
செந்நீர் கரத்தில் வடிந்தாலும் துணியால் மறைத்து பணிசெய்யும் மந்திரக்காரன்,
கேட்ட பொருளை வாங்கவில்லையெனில் நான் தூங்கியபிறகு வீட்டுக்கு வரும் ஏமாத்துதக்காரன்,
பசி கண்ணை கட்டினாலும்
நான் சாப்பிட்டு முடிக்கும்வரை தனக்கு பசிக்கவில்லை என கூறும் புழுகுமூட்டை...
.
இவ்வளவு ஏன்..!

நண்பர்களிடம் நேரம் குறைத்து,
எவளோ ஒருவளை மணந்து,
ஈருயிரை காப்பாற்ற தன்னுயிரை அடகு வைத்து,
பணியில் அடிமையாகவும்,
துணியில் கஞ்சனாகவும்,
பிணியில் மருத்துவனாகவும்,
வலியில் ஊமையாகவும்,
ஊர் ஊராய் சுற்றி சம்பாதித்து குடும்பத்துடன் இல்லாத ஊர் சுற்றியாகவும்,
இருப்பவன்தான் இவன்......
.
சில நேரத்தில்...!

கார வார்த்தைகள் நான் வீச,
அடேய் என்று மட்டும் அவர் பேச...
பிழைக்க தெரியாதவன் என்று மனைவி கூற,
போடி பைத்தியக்காரி என்ற சிரிப்பில் அதை மாற்றி...
படிக்க வைத்தது போதும் பணிக்கு அனுப்பு என்று அவர் நண்பன் கூற,
உனக்கு சொன்ன டீ வந்துடிச்சின்னு இவரும் அதை ஏற்க மறுத்து..,
இருப்பவன் இவன்...

இறுதிவரை...!
மகளிடம் மகனாகவும்,
மகனிடம் நண்பனாகவும்,
மனைவியிடம் தந்தையாகவும்,
வாழ்ந்து அவன் கடைசி மூச்சு வரை தனக்கென எதுவும் செய்து கொள்ள தெரியாத ஒரு உறவு....
.
நம் தந்தை.....❤️❤️❤️❤️❤️

எழுதியவர் : தேவா கிருஷ்ணா (13-Feb-20, 12:58 pm)
Tanglish : appa
பார்வை : 302

மேலே