கொஞ்சம் சிரித்தால் தான் என்ன
உன் விழிகளின்
ஆகர்ஷிப்பில்
மயங்கிய என்னிதயம்
அருகே வந்து தன்
காதலைச் சொல்ல
நினைத்தால்
ஏனோ உன் முகம்
கரும் சிப்பி போல்
இறுகிக் கிடக்கிறது
இது கோபத்தினாலா இல்லை
வேஷத்தினாலா ?
கொஞ்சம் என் முகம்
பார்த்து விருப்பாய்
சிரித்தால் தான் என்ன
உன் சிப்பிக்குள் முத்தும்
ஒளிரும் அல்லவா !
அஷ்றப் அலி