கனவு
சினிமாவில் நாம் காணும்
காட்சி ஒவ்வொன்றும் நிஜமான
மனிதர், மிருகங்கள் வைத்து
ஒளி, ஒலி பதிப்பாளர் , புகைப்பட
நிபுணர், மற்றும் ' டைரக்டர்'
கண்காணிப்பில் எடுக்கப்படும்
காட்சிகள்.... திரையில் நாம்
காணுகின்றோம் ' சினிமா'
ஆனால் நித்தம் நாம் உறங்குகையில்
காணும் 'கனவுகளும்' அப்படியே
திரைப்படத்தையே ஒக்கும் ...
இந்த கனவுகளில் நாம் காணும்
ஆண் பெண் விலங்குகள் மற்றும்
இயற்கைக்கு காட்சிகள் ......
இவை யார் படைப்பு ....யார் எடுக்கும்
படங்கள் இவை .... யார் டைரக்டர்...
எப்படி மனதின் திரையில்
சினிமாப்போல் காண்கின்றோம்
நாளை நடக்கப்போகும் 'நிகழ்ச்சி'
கனவில் திரையாகிறது ......
கனவின் பின் யார் .....புதிரல்லவா
கனவு ....