பிறந்தநாள் வாழ்த்து

மலையும் மலிவா போச்சு,
எம்மக்களும் தனியா போச்சு,
மச்சான் நீ என்கூட இருந்தா....

உலகும் உருகிப் போச்சு,
எரிகுழம்பும் ஒரஞ்சி போச்சு,
டேய் மாமானு நீ சொல்லும்போது ....

எவனும் எதிர்க்க முடியாது,
தொட்டவனும் திரும்ப முடியாது,
மச்சான் நீ என் கூட இருந்தா....

அம்மான்னு நீ கூப்பிட,
அக்கான்னு நான் கூப்பிட,
செல்ல சண்டை நமக்குள்ள ரெண்டுத்துக்கும் ஒரே அர்த்தம்னு தெரியாம...

பெத்த புள்ள நான் இருக்க,
எங்கம்மா உன்ன முத்தமிடும் உன் கண்ணத்துல,
கோபம் வந்தாலும் நானும் முத்தமிட்டன் உன் மறு கண்ணத்துல....

தொப்புள் கொடி உறவ விட,
தாய் மாமண் பாசக்கொடி உறவு ரொம்ப பெருசு,
பெத்தப்புள்ள எத்தன வந்தாலும் என் ஒத்தப்புள்ள நீதான் மச்சான்....

கஷ்டம் வந்தாலும் கூட நிப்ப,
நஷ்டம் வந்தாலும் நகரமா இருப்ப,
என் கட்ட சுடுக்காட்டை தொட்டாலும் நீ என் நெனப்பு நீதான் மச்சான்...

என் ஆச மச்சான்
என் பொறந்த நாள் வாழ்த்துக்கள் நீ என் மகனாய் பிறக்க....

எழுதியவர் : தேவா கிருஷ்ணா (5-Feb-20, 11:25 am)
பார்வை : 431

மேலே