வளையல்

பெண்ணே அடி பெண்ணே
உன் வளையலின் ஓசையோ
என் மனதை உலுக்குகின்றது
வண்ண வண்ண வளையலடி
வளைந்து நெளிந்த வலையலடி
வளையல்கள் பலவிதம்
வாங்கித்தந்தால் புதுவிதம்
கைக்கு அணியும் அணிகலனடி
காதிற்கு இனிமையான ஓசையடி
மனதினை மகிழ்விக்கும் மந்திரமடி
கருவுற்ற பெண்ணிற்கு பெருமையடி
வளையல் என்ற வண்ணமாலையை
அணிவிக்க வந்தேனடி

எழுதியவர் : ஆர்த்தி (5-Feb-20, 1:06 pm)
Tanglish : valaiel
பார்வை : 1273

மேலே