05-02-2020 குடமுழுக்கு

தென்புறத்தில் எழிலாலே சிறந்தோங்கி
தெளிந்தறிவோடு வீரத்தால் புகழோங்கி
தெள்ளு தமிழ் நூல்களால் செழித்தோங்க
தெரிந்த வித்தைகள் பலவற்றை பயின்றோங்கி
தேவருக்கு நிகரான அரசன் அருண்மொழியானின்

தலைநகராம் தஞ்சையில் எழும்பச்செய்த
தலைச்சிறந்து கோ இல்லம் பெருமையடைய
தவமுடைய முனிவர்கள் முன்னிலையில்
தரணி புகழும் பெருவுடையர் பெருமை கூறும்
தனிச்சிறப்பு பெற்றுத் திகழும் கோயில் அதனை

பிறப்பித்து சிறப்பைப் பெற்று ஆட்சி செய் த
பேரரசன் பெருவளத்தான் பெயரை போற்றும்
பெரிய கோயில் என்கின்ற பேரைப் பெற்று
ஆயிரமாம் ஆண்டை கடந்து இன்றும் விஞ்சி நிற்கும்
அதிசயமான திருக்கோயில் அதற்கு இன்று

பெருமை பொங்கும் குடமுழக்கு செய்யும் நாளில்
பிறப்புப் பெற்று உயிர் வாழும் உயிர்களெல்லாம்
ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலம் அறுத்து
அமைதிக் கொண்டு ஆற்றலோடு நீண்டு வாழ
அகம் உருகி தஞ்சை பெருவுடையானே போற்றுவோமே
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (5-Feb-20, 3:52 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 479

மேலே