ஆசிரியர்

எந்தன்
ஆறாம் அறிவினை வளர்த்தாய்..
என்னுள்
பகுத்தறிவினை விதைத்தாய்..
நான் பார்க்கும் காட்சிகளின்
பெயர்களை கற்பித்தாய்..
உனது இதழின் உச்சரிப்பை கவனித்தே..எனது மழலை
மொழியினை மறக்க செய்தாய்..

என்னுள் எழுந்த அச்சத்தை தவிர்த்தாய்
எனக்குள் புது ஊக்கத்தை விதைத்தாய்.

அன்பாய் பேச தமிழை வார்த்தாய்
அண்டை மொழி ஆங்கிலம் தந்தாய்
உயர்வாய் வாழ கணிதம் கற்பித்தாய்
அறிவை தூண்ட அறிவியலை தந்தாய்
சமூக உணர்வுக்கு வரலாற்றை சொன்னாய்..
நீர்..
எனை கண்டு
கர்வம் கொள்ளவில்லை ..
எனை கண்டு
சினம் கொள்ளவில்லை ..
எனை கண்டு
வெறுப்பு கொள்ளவில்லை..
ஓர் நாள்..
உம்மையே மிஞ்சி நான்
வாழ்வில் உயர்ந்து நின்றாலும்..இவள்
என் பிள்ளை என்று பெருமிதம்
கொள்வாய்..எவ்வித கர்வமும் இன்றி..

எழுதியவர் : பஜூலூதீன் யூசுப் அலி (6-Feb-20, 5:39 pm)
Tanglish : aasiriyar
பார்வை : 4335

மேலே