ஓடும் பேருந்தில்

ஓவ்வொரு நாளும் உனக்காகவே
இரவினை வெறுக்கின்றேன்...
பகலில் உனை நான் தரிசிக்கவே..

ஓவ்வொரு நாளும் உனக்காகவே
நிழல் கொடையின் கீழ்
பூத்து நிற்கின்றேன்..
உனை நான் யாசிக்கவே..

ஏறும் இடத்தில் நீ
இறங்கும் இடத்தில் நான்-வெப்பமற்ற
அந்த பேருந்தினில் கனலாய்
கனக்கின்றது உனது பார்வை..

முன்னேறி.. உன் முன் நின்று
அக்கனம் தொலைந்து போன - எந்தன்
தமிழைத் தேடி..அதனைபிடித்து
"உனது பெயர் என்ன?என உரைத்தேன்..

நீயும்.. தமிழை தொலைத்தாயோ?..
மறந்தாயோ?..நின்றாய்...மொளனமாய்...
இரண்டாம் முறை..
"இன்று பேருந்து வேகம் அதிகம்" என்றேன்..இப்போதும் தமிழை தொலைத்தவளாய்...மறந்தவளாய்..
நின்றாய்...மொளனமாய்...

மூன்றாம் முறை..
இதயத்தை பலமாக்கி...
"நீங்கள்..."என்று முடிப்பதற்குள்
இடைமறித்து என்னை நோக்கி
அவள்.."அண்ணா நான் செவிஒலி
அற்றவள்..என் முகத்தைப் பார்த்து
கேளுங்கள்" என்றாள்..அவள்..மறுகனம்
குற்றம் பிடித்தவனாய்..
தன்னிலை குளைந்தவனாய்..
இறங்காத இடத்தினில் இறங்கினேன்..
பாவ மூட்டைய சுமந்து கொண்டு...

எழுதியவர் : பஜூலுதீன் யூசுப் அலி (7-Feb-20, 5:04 pm)
Tanglish : oodum perunthil
பார்வை : 460

மேலே