துரைதனபாலன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : துரைதனபாலன் |
இடம் | : மதுரை |
பிறந்த தேதி | : 28-Nov-1955 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 02-Feb-2019 |
பார்த்தவர்கள் | : 85 |
புள்ளி | : 4 |
நான் ஒரு கவிஞர், எழுத்தாளர் மற்றும் தமிழ் ஆர்வலர். இதுவரை பத்து நூல்களும், நூற்றுக்கணக்கான கவிதைகளும், சில சிறுகதைகளும், பல கட்டுரைகளும் எழுதியுள்ளேன். பதினான்கு விருதுகள் வாங்கியுள்ளேன். தமிழ் ழகரப் பணிமன்றம் எனும் அமைப்பின் கிளையைப் பட்டிவீரன்பட்டியில் தொடங்கி, அங்கும் சுற்றியுள்ள ஊர்களிலும் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு தமிழ் உச்சரிப்புப் பயிற்சியும், திருக்குறளும் கட்டணம் வாங்காமல் கற்பித்து வருகிறேன். இளம் மாணவர்களுக்கு அழகுத் தமிழ்ப் பெயர்கள் சூட்டி, அவர்களுக்குத் தமிழ்ப் பற்றினை ஊட்டி வருகிறேன்.
அகக் கண்
முகத்திருக்கும் இருவிழிகள் உலகம் அறியும்
மோதுகின்ற வேல்விழிகள் இளமை அறியும்
நகத்திருக்கும் நுண்கண்கள் மாவலி அறியும்
நாலுபேரின் கொள்ளிக்கண் தாயுளம் அறியும்
நுதலிருக்கும் நெற்றிக்கண் மதனுரு அறியும்
நுட்பமான ஊற்றுக்கண் மண்ணே அறியும்
புதலிருக்கும் புலியின்கண் மானே அறியும்
புவிமாந்தர் அகக்கண்ணை ஆரே அறிவார்?
உள்ளத்து உணர்வுகளை உலகில் பலரின்
ஒளியுண்ட இருகண்கள் உரத்துப் பேசும்
உள்ளத்தின் ஆழத்தில் உறைந்தே உள்ள
உணர்வுகளை அகக்கண்ணோ ஒளித்தே இருக்கும்
புறக்கண்கள் புன்சிரிப்புச் சிரிக்கும் பலரின்
புகைகின்ற அகக்கண்கள் சினந்தே நோக்கும்
பிறர்துயரைக் காணுகையில் வருந்தும்
அன்புடையீர்,
மொட்டு விரிக்கும் முல்லையாய் உதித்து
சுட்டு எரிக்கும் நெருப்பாய் ஏறி
சேறுள் மறையும் செந்தா மரையென
மாறுங் கதிரவன் மந்திர வாதியோ !
தன்யன் தமிழ் பெயரா?
தண்முகில் ஆண்பாற்பெயரா? பெண்பாற்பெயரா?
தன்யன் தமிழ் பெயரா?
தண்முகில் ஆண்பாற்பெயரா? பெண்பாற்பெயரா?
தமிழன் இந்தியனாக ஏற்றுக்கொள்ளப் படுவானா?
தமிழன் இன்று இந்திய னாக
ஏற்கப் படவே இல்லை என்னும்
தனிநிலை வந்தது ஏனோ என்று
எண்ணிப் பார்த்தால் எண்ணம் மயங்கும்!
தமிழகத் திருந்தே முதன்முத லாக
வெள்ளையர் விரட்டச் சுதந்திரக் குரலைத்
தகைமை மிக்க பூலித் தேவன்
தன்மா னத்தோ டெழுப்பிய தவறா?
காந்தி சொன்ன போராட் டங்கள்
ஒன்றுவி டாமல் உடனே செய்து
செந்தமிழ் நாட்டில் செக்கு இழுத்துச்
சிதம்பரர் சிறையில் சிதைந்த தவறா?
வந்தே மாதரம் என்றே முழங்கிக்
கொடியைக் காக்கும் போராட் டத்தில்
சிந்திய குருதி போதா தென்றே
குமரன் உயிருங் கொடுத்த தவறா?
நேதா ஜியின் வீரப் படையில்
ஆண்கள் உடனே பெண்களும் சே