Gokulraj Kavi - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Gokulraj Kavi |
இடம் | : Krishnagiri |
பிறந்த தேதி | : 01-Aug-1996 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 25-Dec-2021 |
பார்த்தவர்கள் | : 640 |
புள்ளி | : 8 |
இயந்திர பொறியாளன், எழுத்து எனது பொழுதுபோக்கு, வாசிப்பு எனது நிரந்தர வேலை,
உன் பொற்பாதம் பட்டே தளிற்கும் புற்கள்,
உன்னை இடை விடாமல் ஆரத்தழுவும் காற்று,
உன்னை அடையவே உருக்கொண்ட உடமைகள்,
இவற்றை கண்டு மனம்வெதும்பிய கார்மேகம் உனை அடைய உதிர்த்த துளிகள் இந்த மழை,
பாவம் என்செய்வது அதை தடுக்கவும் குறுக்கே நிற்கும் வாழையை,
எனக்காக பிறந்திருக்கும் என்னருமை என்னவளே,
கருப்பொருளாய் என்வாழ்வில் வரப்போவதும் நீதானே,
எனை வாழ்வில் வழிநடத்த கருக்கொண்டு பிறந்தவளே,
நீ எவ்வாறு இருப்பாய் என இந்நாள்வரை நானறியேன்,
என்வாழ்வில் கருப்பொருளாய் வந்து ஆட்சிசெயும் நீயாதலால்,
இந்நாளும், எந்நாளும் எனக்கு நீ கருவாச்சியே.
அறிவால் வழிநடத்தி புதுப்பாதை காட்டியவனே!
உனைபோல் அறிவுடையோனை அன்னையை தவிர நான் அறியேன்,
பார்ப்பவர்கள் வியப்பாரே அதிகாரியோ நீயென்று,
ஆனாலும் சாதாரண மானுடனாய் எந்நாளும் இருப்பவன்நீ,
ஞாலத்தில் எவ்விடத்திலும் கருணையோடு இருப்பவனே,
ஞாலத்திலும் உனக்குநிகர் யாவரும் நின்றத்திலை,
உலகில் நான் உயரும் போதல்லாம் எனக்கு கீழ் இருப்பவனே,
வழிதவறி, நெறிதவறி நான்விழும் நேரமெல்லாம் எனைத்தாங்கி பிடிப்பதற்க்கே,
உனை யாமாற்றி வென்றவரையும் நீவென்றாய் உன்குணத்தால்,
அவரது பணத்திற்கு சரிநிகராய் பெயாராடைந்தாய்,
நீ வாழ்ந்த வாழ்க்கையை நான் வாழ இயலவில்லை,
எவ்வாறு நானுரைப்பன் இயலாமையை இவ்வுலகிற்கு,
ஆராரோ ஆரிராரோ கண்மணியே நீ உறங்கு,
என்றும் உடனிருப்பேன் பயமில்லாமல் நீ உறங்கு,
உனையடையவே வாழ்வினிலே இத்தனை நாள் காத்திருந்தேன்,
ஆதி முதல் அந்தமெல்லாம் என்வாழ்வில் நீதானே,
உனையடைய வாழ்விதனில் ஈரைந்துமாதம் தவமிருந்தேன்,
இறைவனே வந்தானோ என்தவத்தின் பிரதிபலனாய்,
நீயடைய உலகுண்டு எந்நாளும் அதை மறவாதே,
உன்னுடனே துணையிருப்பேன் நீ தோற்க்கும் போதெல்லாம்,
உன்கோலுசொலியை கேட்டுத்தான் என் இதயம் துடிக்குதடி,
நீ சுழன்று விளையாடுவதால் என்னுலகம் சுழுலுதடி,
நீவிடும் மூச்சினிலே என்னுயிர் இங்கு வாழுதடி,
நீ செய்யும் குறும்புனிலே என்பேச்சு திக்குதடி,
நீ நிலைபெற்று இருப்பதற்க்கே என்வாழ்வு உள்ளதடி