கருவாச்சி

எனக்காக பிறந்திருக்கும் என்னருமை என்னவளே,
கருப்பொருளாய் என்வாழ்வில் வரப்போவதும் நீதானே,
எனை வாழ்வில் வழிநடத்த கருக்கொண்டு பிறந்தவளே,
நீ எவ்வாறு இருப்பாய் என இந்நாள்வரை நானறியேன்,
என்வாழ்வில் கருப்பொருளாய் வந்து ஆட்சிசெயும் நீயாதலால்,
இந்நாளும், எந்நாளும் எனக்கு நீ கருவாச்சியே.

எழுதியவர் : கவி.கோ(Kavi.கோ) (16-Jan-22, 5:18 pm)
சேர்த்தது : Gokulraj Kavi
பார்வை : 2937

மேலே