அப்பா

அறிவால் வழிநடத்தி புதுப்பாதை காட்டியவனே!
உனைபோல் அறிவுடையோனை அன்னையை தவிர நான் அறியேன்,

பார்ப்பவர்கள் வியப்பாரே அதிகாரியோ நீயென்று,
ஆனாலும் சாதாரண மானுடனாய் எந்நாளும் இருப்பவன்நீ,

ஞாலத்தில் எவ்விடத்திலும் கருணையோடு இருப்பவனே,
ஞாலத்திலும் உனக்குநிகர் யாவரும் நின்றத்திலை,

உலகில் நான் உயரும் போதல்லாம் எனக்கு கீழ் இருப்பவனே,
வழிதவறி, நெறிதவறி நான்விழும் நேரமெல்லாம் எனைத்தாங்கி பிடிப்பதற்க்கே,

உனை யாமாற்றி வென்றவரையும் நீவென்றாய் உன்குணத்தால்,
அவரது பணத்திற்கு சரிநிகராய் பெயாராடைந்தாய்,
நீ வாழ்ந்த வாழ்க்கையை நான் வாழ இயலவில்லை,
எவ்வாறு நானுரைப்பன் இயலாமையை இவ்வுலகிற்கு,

எழுதியவர் : கவி.கோ(Kavi.கோ) (16-Jan-22, 4:21 pm)
சேர்த்தது : Gokulraj Kavi
பார்வை : 1039

மேலே