ஆராரோ ஆரிராரோ

ஆராரோ ஆரிராரோ கண்மணியே நீ உறங்கு,
என்றும் உடனிருப்பேன் பயமில்லாமல் நீ உறங்கு,

உனையடையவே வாழ்வினிலே இத்தனை நாள் காத்திருந்தேன்,
ஆதி முதல் அந்தமெல்லாம் என்வாழ்வில் நீதானே,

உனையடைய வாழ்விதனில் ஈரைந்துமாதம் தவமிருந்தேன்,
இறைவனே வந்தானோ என்தவத்தின் பிரதிபலனாய்,

நீயடைய உலகுண்டு எந்நாளும் அதை மறவாதே,
உன்னுடனே துணையிருப்பேன் நீ தோற்க்கும் போதெல்லாம்,

உன்கோலுசொலியை கேட்டுத்தான் என் இதயம் துடிக்குதடி,
நீ சுழன்று விளையாடுவதால் என்னுலகம் சுழுலுதடி,

நீவிடும் மூச்சினிலே என்னுயிர் இங்கு வாழுதடி,
நீ செய்யும் குறும்புனிலே என்பேச்சு திக்குதடி,
நீ நிலைபெற்று இருப்பதற்க்கே என்வாழ்வு உள்ளதடி,

இவையாவும் நீயடைய இவ்வுலகில் காத்திருக்க,
நீ எதற்கு அழுகிறாய் கண்மணியே நீஉறங்கு.

எழுதியவர் : கவி.கோ(Kavi.கோ) (15-Jan-22, 11:36 am)
சேர்த்தது : Gokulraj Kavi
பார்வை : 1872

மேலே