ஆடுகிறான் அப்பன்
ஆடுகிறான் அப்பன்.
ஆடுகிறான் என் அப்பன்!
ஆடுவதற்கு ஓர்
இடமில்லை என்று,
ஆடுகிறான் பார்
நடு சுடுகாட்டில்.
ஆடுகிறான் என் அப்பன்!
ஆடுவதற்கு ஓர்
நேரமில்லை என்று,
ஆடுகிறான் பார்
நடு இராத்திரியில்.
அவன் ஏன்
ஆடுகிறான்!
அது எனக்கு புரிவதே
இல்லை,
அதை நான் அவனிடம்
கேட்டதும் இல்லை.
ஆனால்,
என் அப்பன் கூத்து
நின்று விட்டால்!
என் கூத்தும்
நின்றுவிடும்,
அது மட்டும்
என்க்கு புரிகிறது.
ஆக்கம்
சண்டியூர் பாலன்.