கொரோனா பொங்கல்

*கொரோனா பொங்கல்*
☃️☃️☃️☃️☃️☃️☃️☃️ மனிதரைப் பார்த்து நாங்களும் இன்று...... மகிழ்வாய் கொண்டாடுறோம் பொங்கல் என்று .......
கிராமம் திரும்ப எங்களுக்கென்று ..
கிடைத்தது பேருந்தில் கால்வாசி இருக்கை..

இன்று முதலாய் ஐந்து தினங்கள். எங்களுக்கென்றே வழிபாட்டுத் தலங்கள்.

வீரம் நிறைந்தது ஜல்லிக்கட்டாம்.
யாரும் வராதீர் நாங்கள்தான் பார்க்கனும் ......
இரவு முழுக்க மனிதரை அடக்கி
எங்கள் பயணமே இயல்பாய் இருக்கனும் ......
ஞாயிறு அன்று விடுமுறை என்று
நாங்கள் பயணிப்போம் பகலிலும் அன்று..

இல்லம் தேடிக் கல்வியை வளர்த்தி.
எல்லாப் பிள்ளைகளையும் அங்கே துரத்தி.

கல்வியைக் கற்றிட பள்ளிகள் முழுக்க -- எங்களுக்கு சொல்லித் தந்திட ஆசிரியர் இருக்கனும் ...

நல்வாழ்வு தந்திட்ட அரசுக்கு நன்றியாய். நாங்களும் வைக்கிறோம் வைரஸில் பொங்கல்.....

புதுப்புது பெயர்களில் வைரஸ்கள் பொங்கனும்..

அடுத்தாண்டு ஆட்சியில் நாங்கள்தான் இருக்கனும்

☃️☃️☃️☃️☃️☃️☃️☃️☃️☃️☃️

எழுதியவர் : க.செல்வராசு (15-Jan-22, 5:39 am)
சேர்த்தது : கசெல்வராசு
பார்வை : 42

மேலே