உன்னை திமிராக வைத்துக் கொள்

பெண்ணாக உரு எடுத்ததிலிருந்து
மாதம் மூன்று நாள்
உறைந்த உதிரம்
உடைந்து ஓடுகிறது..

உதிரத்தின் வாடை
ஊர் எங்கும் வீச
உண்மை என்று பாராமல்
உறுப்புகளுக்கு அலையும் கூட்டம்..

பறையை தட்டி கொண்டாடி
பாதளாம் வரை இசைத்த
பாமர மக்கள் நாங்கள்
உயிர் என்று பாராமல் வதைக்க
நினைக்கும் கயவர் நீங்கள்..

சதைக்கு அலைந்து திரியும்
சில ஆடவர் மத்தியில்
பெண்ணே உன் அம்மனம்
அவர்களுக்கு எப்போதும்
அசிங்கத்தை தருவதில்லை..

உள்ளத்தை உடைக்காமல்
உருவத்தை முழுமையாக்கிடு
உன்ன மிஞ்ச இங்கு
ஒருவரும் இல்லை..

உன் வீரத்தை வெறியாக்கி
வெறியை தீயாக மாற்றி
கண்ணுக்குள் வைத்து
வியந்து பார்க்க வை எவரையும்..

எழுதியவர் : (14-Jan-22, 2:36 pm)
சேர்த்தது : கவி குரு
பார்வை : 102

மேலே