பொங்கல் வாழ்த்து

தைபிறந்தே வையகத்தில்
மெய்பிறந்த கதை சொல்லும்
வியர் வடித்த விவசாயி,
புது புழுகு பொங்கிடத்தான்
பொங்குமிந்த புத்தரிசி பொங்கலோ
வழிந்து வரும் கோலமதை கண்டிடத்தான்
பாடெல்லாம் நாளெல்லாம் பட்டுவந்த
யோகமென வலிநீங்கி சோர்வின்றி
இனி வருவதெல்லாம் இன்பமென்று
இனிதுணர்ந்து பொங்கலிடும்
பொங்கலிது பொங்கலோ பொங்கலிது,
இன்றுபோல் என்றென்றும் இனிதுணர்ந்து
பொன்வண்ணக் கோலமிட்டு கூடி நின்று
மனசெல்லாம் மகிழ்ச்சியுடன்
பொங்குமிந்த பொங்கலோ பொங்கல்
அடிச்சுவடு சொல்லித் தரும் அழகியதோர்
ஏர் பாட்டின் வரலாறு,
சேறு கண்டோம் சோறு கொண்டோம்
சொல்லிவரும் சரித்திரங்கள் ஏராளம்
வரலாறு படைத்ததும் படைப்பதும்
கொண்டதெல்லாம் இதனாலே ,
பொங்கலிட்ட கைகளுக்கு புதுப் பொலிவும்
உள்ளமெள்ளலாம் பூரிப்பும் புத்துணர்வும்
பொங்கிடத்தான் பொங்கிடத்தான்,
பொங்கல் தரும் மகிழ்ச்சியெனும்
போதை மனசெல்லாம் ஊறிடவே
நலமுடனும் நட்புடனும் நண்மையிலே
நாளெல்லாம் திளைத்திடுவோம்
பொங்கலோ பொங்கல்
வாழ்த்துக்கள் பல கூறி வாழ்த்துகிறேன்

எழுதியவர் : பாத்திமாமலர் (14-Jan-22, 1:22 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : pongal vaazthu
பார்வை : 125

மேலே