kandhaknight - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : kandhaknight |
இடம் | : Chennai |
பிறந்த தேதி | : 15-Jul-1994 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 05-Feb-2019 |
பார்த்தவர்கள் | : 162 |
புள்ளி | : 9 |
என்னைப் பற்றி...
கவிஞன் ஆக முயற்சிக்கிறேன்✒\r\n\r\n ஏனென்றால்! அவள் உள்ளம் ஒரு வெள்ளைக் காகிதம்.\r\nஅதனால்! ✍என் எழுத்துக்களைப் பொறித்து அவள் உள்ளத்தை வென்றிடுவேன்.💘
என் படைப்புகள்
kandhaknight செய்திகள்
என் சகியே
நீ கொண்ட மௌனம் எல்லாம் என் வாழ்வில் எழுதாத பக்கங்கள்
உன் சூழலை உணராது உன் நிலை அறியாது நான் தவித்த தவிப்புகள் சொல்லிமாளாது!
நீ நலமா, இல்லை! நிலையில் ஏதோ மாற்றம் என்று என்னுள் எழுந்த கேள்விகளுக்குப் பதிலளிக்க யாருமில்லை.
நான் தவித்த தவிப்பை எல்லாம் உன் குரல் கேட்டு அடுத்த நொடி உடைந்தது.
அழகிய வானில் இருள் சூழ்ந்து 4 நாட்கள் இடி மின்னலுடன் மழை பெய்தது,
இன்று மேகங்கள் கலைந்து வானம் தெளிவானது உன் அழகைப் போல,
கலங்காதே தளராதே என் சகியே
துன்பங்கள் உன்னை நீங்கிப் போகும்
உன் முகம் பார்த்தாலே எனக்கு போதும்
இரு துருவங்களாக இருந்தோமே!
காதல் கோட்டில் இணைந்தோம்!
முரண்பாடுகள் கொண்டோமே! முழு நேரச் சண்டை போட்டோமே!
வாக்குவாதங்கள் கொண்டோமே! காதல் வலியை உணர்ந்தோமே!
உன்னை அறிய நான் தோற்றேன்! என்னைஅறிய நீ தோற்றாய்!
காதல் வென்றது!!
காமம் இல்ல காதல் இல்லை!
நம் காதலில் கலப்படம் இல்லை!!
கையோடு கைகோர்த்தோமோ, திருமணப் பந்தத்தில் நாம் இணைந்தோம்.
நாம் ஆயிரம் இரவுகள் கடந்து விட்டோம் இருந்தும் இதுதான் நம் முதல் இரவு!!
கடந்தகால நினைவுகளுடன் தொடங்குகிறது நம் எதிர்காலம்.
மாலை நேரத்து சிவந்த வானம் உன் உதட்டை அழகை சொல்லுதடி!!
மேகம் கலைந்து இருள் சூழ்ந்தாலும், முழுமதி உன் முகம் காட்டுத்தடி!!
நினைவிலும் நீதான்! நடுநிசி கனவிலும் நீதான்!!!
அதிகாலையில் நான் விழிக்க, என் முதல் பார்வை உன் குறுஞ்செய்தி தான்!!!
போதுமடி!! சுழல்கிறேன் உன்னால்.
கையோடு கை கொடுத்து விடு, உன் காதல் சிறையில் என்னை அடைத்து விடு!!!
நான் செய்த பாவம் தான் உன்னை இழந்து தவிக்கிறேனோ!!
நான் செய்த பாக்கியம் தான் உன்னை நினைவில் நினைவில் சுமக்கிறேனோ!!
என் வலி புரிந்து இறைவன் வரம் கேட்டால்!!
நான் உன்னைக் கேட்பேன் அம்மா!!
கைமாறு அவன் கேட்டால்!!
என் உயிரைக் கொடுப்பேன் அம்மா!!
மேலும்...
கருத்துகள்