இரு துருவங்களாக இருந்தோமே! காதல் கோட்டில் இணைந்தோம்! முரண்பாடுகள்...
இரு துருவங்களாக இருந்தோமே!
காதல் கோட்டில் இணைந்தோம்!
முரண்பாடுகள் கொண்டோமே! முழு நேரச் சண்டை போட்டோமே!
வாக்குவாதங்கள் கொண்டோமே! காதல் வலியை உணர்ந்தோமே!
உன்னை அறிய நான் தோற்றேன்! என்னைஅறிய நீ தோற்றாய்!
காதல் வென்றது!!
காமம் இல்ல காதல் இல்லை!
நம் காதலில் கலப்படம் இல்லை!!
கையோடு கைகோர்த்தோமோ, திருமணப் பந்தத்தில் நாம் இணைந்தோம்.
நாம் ஆயிரம் இரவுகள் கடந்து விட்டோம் இருந்தும் இதுதான் நம் முதல் இரவு!!
கடந்தகால நினைவுகளுடன் தொடங்குகிறது நம் எதிர்காலம்.