கார்த்திக் பிரகாசம் - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/user/user_default_image.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : கார்த்திக் பிரகாசம் |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 27-Apr-2015 |
பார்த்தவர்கள் | : 52 |
புள்ளி | : 8 |
பல வருடங்களுக்கு பிறகு மீண்டும்
ஒரு பெண்ணின் மீது
ஆழமான காதல்...!!!
ஏற்கனவே காதல் வயப்பட்டவன் தான்.
ஆனால் இவளின் மீது காதல்
கொள்ளாமல் இருக்க முடியவில்லை...!!!
அன்று அவளை காதலித்ததனால்
அவள் என் உறவானாள்...!!!
அவள் உறவானதால்
இன்று இவள் என் மகளானாள்...!!!
ஆண்களின் வாழ்க்கை காதலுக்கு முன்
காதலுக்கு பின் என்று பக்குவப்படுகிறது...!!!
பெண்களின் வாழ்க்கை திருமணத்திற்கு முன்
திருமணத்திற்கு பின் என்று திருத்தி எழுதப்படுகிறது...!!!
"சாப்பிட்டியா..?" என்று கேட்கும்
உறவுகளை விட
"சம்பளம் எவ்வளவு.?" என்று கேட்கும்
உறவுகள் தான் அதிகம்...
சென்னை வரை செல்லும் அடுத்த தொடர் வண்டி இன்னும் சற்று நேரத்தில் தடம் 4ல் வந்து சேரும்..
முதன் முறை சென்னைக்கு கிளம்பும் ஒவ்வொருவருக்கும் இந்த அறிவிப்பை கேட்கும் போது தன்னிச்சையாக ஒரு ஆனந்த சிலிர்ப்பு உண்டாகும்.. ரயில் வரும் திசையைப் பார்த்தால், தங்களின் எதிர் காலத்திற்கான விதை குழந்தை போல் தண்டவாளத்தில் தவிழ்ந்து வருவது போல் இருக்கும்.
அதில் பெரும்பாலனோர் நடுத்தர வர்க்கத்தில் பிறந்து நகரத்தில் வேலை பார்க்க, விதியால் சபிக்கப்பட்டவர்களாகத் தான் இருக்கும். "வேலைக்குப் போயி பணம் சம்பாதிக்க வேண்டும்..!!" என்ற ஒரே ஒரு காரணத்திற்காக 22 வருடங்கள் பிறந்து வளர்ந்த ஊரை விட்டுவிட்டு செல்கிறேன் எ
உனக்கு திருமணம் செய்து அனுப்பி வைக்கும் போது கூட
ஏற்படாத பிரிவும் வலியும் இன்று
உன்னை பிரிந்து உன் வீட்டில் இருந்து
திரும்பும் போது மனதை ஒருசேர பிளக்கிறது..
ரயிலில் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.
நிறைய பேர் எதிரிலும் ஜன்னலின் வழியும்
என் விழிகளில் விழுந்து செல்கின்றனர்.
ஆனால் மனமெங்கும் அண்ணன் தங்கையாக
நானும் நீயும் சண்டைக்காக சமாதானமும்
சமாதானதிற்காக சண்டையும் இட்ட நினைவுகளும்
எனக்காக நீ செய்த சிறுசிறு தியாகங்களும்
என்னுள் உறைந்து கிடக்கும் கண்ணீர்த் துளிகளை
உயிர்ப் பெற வைக்கின்றன..
நீ திருமணம் முடித்து போன போது வீடெங்கும்
உன் நினைவுகள் நிரம்பி வழிந்தன.
உன்னை பிரிந்து ச