முத்து மீனாட்சி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : முத்து மீனாட்சி |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 21-Mar-2020 |
பார்த்தவர்கள் | : 155 |
புள்ளி | : 5 |
முதல் நூல்: மௌனம் ஒரு மொழியானால்
வாழ் மனிதா வாழ்
************************************
இது
நன்றி நவிழ்ந்திடும் நேரம்..!
என்னென்ன கொடுத்தது
இந்தப் பிரபஞ்சம்
இந்ந பூமி
இந்த நாடு
இந்த வாழ்வு
எத்தனை சந்தோஷங்கள்
எத்தனை நினைவுகள்
எத்தனை பாடங்கள்
இனியேனும் சிரி
பார்க்கும் மனிதரிடமெல்லாம்
புன்னகை செய்
எதிரில் எதிரி வந்தாலும்
புன்னகை ஆயுதத்தால்
எதிர்கொள்
கொஞ்சம்
அக்கறைக் காற்றால் வருடிக் கொடு
சாதிக் கழிவை
சாக்கடையில்
எறி
அன்புப் பள்ளம் தோண்டி
அதில்
கோபப் பிணத்தை புதைத்து விடு
காலையின்
இளம்காற்றுக்கு
கதகதப்பாய்
இதழ் தேநீர் தொட
பால் ஊற்றிச் செல்லும்
"பால்கார"னிடம்
இனி பெயர் கேள்..!
நலம்
அந்த திருமணம்
வித்தியாசமானது..!
வாழ்க்கைக் கனவுகளை
வாழையாக்கி வாசலிலே
கட்டிவைத்திருந்தது
கண்ணீரை பன்னீராக்கி
வரவேற்பில் வைத்திருந்தது
சந்தனத்தில் சாதியை
குழப்பி வைத்திருந்தது
கற்கண்டில் கனவுகள்
கண்ணுக்குத் தெரியாமல்
அடைக்கப்பட்டு பின் படைக்கப்பட்டு
இனத்தவர் வாயிலே
அரைபட்டுக்கொண்டது
அதிசயம் யாதெனில்
அழுதே விழுந்த
கண்ணீர்த் துளியில்
துளிர்விட்டு முளைத்த
செடியின் பூக்களால்
அலங்கரிக்கப் பட்ட
அழகிய மேடை
காதலை சாம்பலாக்க
சுடர்விட்டு எரிந்தது
யாகத்தில் சா(தீ)..!
கௌரவ சாயம்
முகத்தில் பூசி
தற்கொலை மிரட்டலே
அணிகலனாய்
ஏற்று
இதயம் செத்தவள்
சதை நின்றது
மணப்பெண
இயற்கை மருத்துவரிடம்
முறையிட்டது பூமி..!
புதுவித வியாதி புகுந்து
ஆட்டி வைக்கிறதெம்மை..!
"புதுவித வியாதியா..?"
புருவம் உயர்த்தினார் மருத்துவர்.
"ஆம்..!"
கண்ணீர் கசிந்தது
அந்நீரும் கறுத்திருந்தது.
"வரலாறு கூறு
விடை தேட முயற்சிப்போம்"
மிருதுவாய் மிளிர்ந்த
வெளித்தோளோ இன்று
வெந்து அவிந்து
வெறும் தழும்பானதும்
என் சுவாசக் காற்றெங்கும்
புகையேறிப் போக
மூச்சுமுட்டிக் கொண்டதும்
நீராலான தேகத்தில்
தேக்கிய அசடுகளை
அழிக்கவியலா ஆதங்கமும்
மூச்சே வீச்சமெடுத்த அவலமும்
சின்னஞ்சிறு
விலங்கு உண்ட மிச்சமோ
பறவையின் எச்சமோ
எப்படியோ
நிறைந்த என் கருப்பை
கருவறுக்கப்பட்டதும்
கண் ம
கண்ணுக்குப் புலப்படா நுண்ணுயிரி வாழ்க்கைக்கு புது அர்த்தம் உணர வைக்கிறது.
இதுவரை மதிப்பெண் உன் வாழ்வெனக் கூறினார்களே..!
இன்று தேர்வே இன்றி தேர்ச்சி பெறமுடிந்தது.
அந்த தேர்ச்சி இன்றி மதிப்பெண் பாகுபாடால் வீட்டில் வசைபாட சொந்தங்கள் கேள்வி கேட்க கூனிக் குறுகி தற்கொலைக்கு உட்பட்ட மாணவர்கள் தான் எத்தனை..?
இப்பொழுது விளங்குகிறதா மதிப்பெண்னைவிட வாழ்வு மாறுபட்டதென்பது..!!
திருமணம்..!
அதில்தான் எத்தனை ஆடம்பரம்
கோடிகளில் புரண்டு லட்சங்களை சிதறவிடும் பிரம்மாண்டப் பெருவிழாவில் யாரிடம் தன் பணபலத்தை காட்ட தன் கௌரவத்தைக் காட்ட முயன்றோமோ யாருமே வரப்போவதில்லை அவ்விடம் தேடி...ஏனென்றால் இன்றோ கூட்டம
வா..!
சிலிர்த்துக் கொள்
நான் கர்ப்பம் தரித்துவிட்டேன்
வெட்கிய இதயத்திடம்
வினவியது அறிவு
காதல் கருவின்
உரு கெடாமல்
பத்திரமாய்ப் பார்த்திடத்
தெரியுமா உனக்கு..?
ஏன் தெரியாது..?
மாதம் வருடமென
நாட்கள் நீள நீள
கனம் தாங்கி அன்பெனும்
தொப்புள் கொடிவழி
காதல் கருவிற்கு
பாசச் சோறூட்டி
பெருக்க வைக்கத் தெரியும்
கல்யாணப்
பிரசவ அறையில்
பிரவேசிக்கும்
ஆழுமையும் உண்டெனக்கு
சொன்னபடி
காதல் கரு வளர்த்து
கல்யாணப் பிள்ளையை
பெற்றெடுத்தது
இதயம்....!
ரத்த நாளத்தில்
சாதீயம் ஓட
சோற்றுக்கு பதில்
சாதிப் பற்று தின்று
கொழுத்த
மிருகக் கூட்டத்தின் நடுவே
மிருதுவான
காதல் பிள்ளையை
பெற்றெடுத்ததே குற்றமா..?
பிறந்த பிள்ளை
நடக