சொல்ல நினைத்த பாடம்

கண்ணுக்குப் புலப்படா நுண்ணுயிரி வாழ்க்கைக்கு புது அர்த்தம் உணர வைக்கிறது.

இதுவரை மதிப்பெண் உன் வாழ்வெனக் கூறினார்களே..!

இன்று தேர்வே இன்றி தேர்ச்சி பெறமுடிந்தது.
அந்த தேர்ச்சி இன்றி மதிப்பெண் பாகுபாடால் வீட்டில் வசைபாட சொந்தங்கள் கேள்வி கேட்க கூனிக் குறுகி தற்கொலைக்கு உட்பட்ட மாணவர்கள் தான் எத்தனை..?
இப்பொழுது விளங்குகிறதா மதிப்பெண்னைவிட வாழ்வு மாறுபட்டதென்பது..!!

திருமணம்..!
அதில்தான் எத்தனை ஆடம்பரம்
கோடிகளில் புரண்டு லட்சங்களை சிதறவிடும் பிரம்மாண்டப் பெருவிழாவில் யாரிடம் தன் பணபலத்தை காட்ட தன் கௌரவத்தைக் காட்ட முயன்றோமோ யாருமே வரப்போவதில்லை அவ்விடம் தேடி...ஏனென்றால் இன்றோ கூட்டம் கூட தடை..!

அங்கே கௌரவத்தைவிட பணத்தைவிட பாசத்தைவிட உயிர்பயம் முன்னோக்கி நிற்கிறது.

எத்தனை காதலை சரிதான் என்று உணர்ந்த போதும் சொந்தத்தின் வசைபாடுதலுக்காக சாதிக்காக ஒதுக்கி ஆசைகளை கொன்று வேறு மணம் பணத்துக்கு பேசி முடித்திருப்பார்கள்..?

இன்று அந்த அரை நாள் நிகழ்வில் தலைகாட்ட கூட சொந்தக்கூட்டம் வரமுடியாத சூழலை ஓர் நுண்ணுயிரி நிகழ்த்தி இருக்கிறது.

மனிதனுக்கு மனிதன் அத்தனை வேற்றுமை
இனப்பற்று சாதிப்பற்று எனவெறிபிடித்து திரியும் கூட்டம் தன் சாதியில் கொரோனா தொற்றினால் தொட்டு உடனிருந்து ஆறுதல் அளிப்பானா என்ன..?

நிச்சயம் இல்லை..!
அங்கு இனப்பற்றுக்கு இரண்டாமிடமே..!

நோய் பொது
அதற்கு சாதி தெரியாது,மதம் தெரியாது,இனம் தெரியாது,மொழி தெரியாது மனிதனை மட்டுமே தெரியும்.

CAA என கோஷமிட்ட வாயெல்லாம் கொரோனா என பேச வைத்தது.

இந்த நாட்டில் வளமில்லையென
வெளிநாடு நோக்கி பயணப்பட்டவர்களை மீண்டும் தாயகம் தேடிவர வைத்தது.

எந்தக் கோவிலுக்கு சென்றால் சனி பிடிக்காது என்றார்களோ எந்தக் கோவிலை நோக்கி படையெடுத்தோமோ அதே கோவிலில் கூட்டமிட்டால் சளிபிடிக்குமென்பதால் சனியை பொருத்துகொண்டோம்..!
வரம் கொடுக்கும் சாமியும் கொரோனாவால் கதவடைத்து தனிமைப்படுத்தப்பட்டது.

கடவுள்...
சிலையாய் அல்ல..
மனித உருவில் இருக்கிறார் என்பதை மருத்துவமனைகள் மூலம் உணர வைத்தது.

ஓர்கண்ணுக்குத் தெரியா நுண்ணுயிரி..!
.
நிஜம்தானே..!!

எழுதியவர் : முத்து மீனாட்சி (21-Mar-20, 4:29 pm)
சேர்த்தது : முத்து மீனாட்சி
பார்வை : 330

சிறந்த கட்டுரைகள்

மேலே