மனஅழுத்தம் தவிர்

மனஅழுத்தம்...இங்கு எல்லாருக்கும் இருக்கும் ஒரு *குணம்* தான்! கவனிக்கவும் குணம் ..வியாதி அல்ல. மனித மனம் வினோதமானது ...அது எப்போதும் எதையாவது யோசித்துகொண்டே இருக்கும்...அதில் கடந்த கால 1)தோல்விகள் 2)முடிக்கமுடியாமல் போன பணிகள் 3) ஏமாற்றங்கள் 4) மிகவும் சந்தோசமான நினைவுகள்(அதை ஏக்கமாக நினைப்பது),
நிகழ்கால 1) நமக்கு அவசியமில்லா விசயங்கள் 2) நம்மால் தீர்க்க முடியாது என்று தெரிந்த விசயங்கள் 3) நமது வட்டம் தாண்டிய விஷயங்கள்
எதிர்கால,
1) பயங்கள் 2) திட்டமிடுதலை தாண்டிய கற்பனை கள்
இதை எப்போதும் அசை போட்டுகொண்டு இருப்பதால் தான் ..மன அழுத்தம் வருகிறது..!
எப்படி தவிர்ப்பது..?
1) நிகழ்கால வாழ்வை மகிழ்ச்சியாக நினைக்க வேண்டும்..
2) தோல்வியை, ஏமாற்றத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்
3)திட்டமிடலும் உழைப்பும் மட்டுமே நம்மை உயர்த்தும் (அதுவும் படிப்படியாக) என்று திட்டமாக நம்ப வேண்டும்.
4) தியானம் அல்லது விளையாட்டு அல்லது யோகா என இதில் ஒன்றை தவறாமல் தினமும் செய்ய வேண்டும்.
5) நமக்கு அன்பானவார்கள் கூட அதிக நேரம் செலவிட வேண்டும்..
இதை கடைபிடிக்க பழக்கி கொண்டால் ..என்றும் நிம்மதி தான்..வாழ்வில்..
சொல்ல மறந்த ஒன்று...நமது மனம் எதையும் மறக்கும் திறன் கொண்டது.. நாம் தான் ஏதோ ஒரு பழைய தோல்வியை நினைக்க வற்புறுத்துகிறோம் ..நிகழ்கால வாழ்க்கையில் மட்டும் கவனம் செய்ய இது மறையும்.!

எழுதியவர் : (21-Mar-20, 8:24 pm)
சேர்த்தது : மன்னை சுரேஷ்
பார்வை : 99

மேலே