Pradeep - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Pradeep
இடம்:  chennai
பிறந்த தேதி :  10-Sep-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  10-Mar-2020
பார்த்தவர்கள்:  139
புள்ளி:  18

என் படைப்புகள்
Pradeep செய்திகள்
Pradeep - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Mar-2020 4:52 pm

பிள்ளைகளை காக்கும் தாயை தெய்வம் என்றோ!
ஆண்கள் முன்னேற ஊக்கம் கொடுக்கும் சக்தி என்றோ!
கற்பினை காக்கும் புனிதம் என்றோ!
வீட்டினை காக்கும் தேவி என்றோ!
ஒழுக்கம் காக்கும் உயிர் என்றோ!

வகைப்படுத்தாமல்

அவள் மனித பிறப்பின் அனைத்து உணர்வுகளையும் உரிமைகளையும் உள்ளடக்கிய ஒரு பாலினம் என்ற அடிப்படை அறிவியல் ஏந்தி

உரிமைகளை சமமாக்கி!
உணர்வுகளை உரக்க பேசி!
கொண்டாடுவோம் சமத்துவமாக

மேலும்

Pradeep - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Mar-2020 4:51 pm

அழகிய சோலை!
அவளுக்கு அங்கு என்ன வேலை!
அழகிய மயில்கள் கூடி
ஆடி ஓடி விளையாடும் மாலை!
அந்த இடம் தானே!
அவள் அங்குதானே இருப்பாள்!

வண்ணத்துப்பூச்சி ஒன்று
பூவின் இதழோரம் தேன் எடுக்க சென்று
தேனின் சுவையால் மதி தோற்று
மா விழியின் இதழ்களில் மயங்கி நின்றது

மான் கூட்டமோ மங்கை அவள்
தோல் கண்டு துவண்டு வீழுந்தது
புள்ளினங்கால்களோ அவளின் நீண்ட
புறம் கண்டு புறமுதுகிட்டு பறந்தது

சிங்கமும் புலியும் தன் இயல் மறந்து
அவளின் சிகை கண்டு ரசித்தது
பளிச்சிட்ட அவள் முகம் கண்ட
சூரியனோ மரக் கிளைகளின் மறைவில் கண்ணாமூச்சி ஆடியது

இதோ அவள் சென்ற அன்று
மொத்த சோலையும்
தன் வேலை மறந்து
அவள் மேலை ரசித

மேலும்

Pradeep - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Mar-2020 4:48 pm

நீ இச்சாதி நான் அச்சாதி
நீ அப்பால் நான் இப்பால்
நீ அவ்வினம் நான் இவ்வினம்
நீ அம்மொழி நான் இம்மொழி
என்றோர் பிரிவினை இயல்பில்
உயர்வு தாழ்வு கற்பித்து
மனித விடுதலை மறந்து
அயர்ந்து உறங்கும்
உருண்டை பந்தின்
ஒப்பற்ற உயிரினம் நாம்.
என்று பேதங்கள் ஓய்ந்து
சமத்துவம் ஓங்குமோ
அன்று தானே ஏந்துவோம்
சமூக விடுதலையை.....

மேலும்

Pradeep - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Mar-2020 4:45 pm

நீ இல்லை நான் உண்டு
உன் நினைவுகளோ மா கடல்
அதன் விளிம்பில் தினம் தினம் பிரகாசமாய் உதிக்கும் சூரியன் நீ
உந்தன் வெளிச்ச தோளில் துள்ளி துள்ளி குதித்து
உன் நினைவு அலையில்
சறுக்கி சறுக்கி நீந்தி
இந்த உலகை வெல்ல
அது உன் பெயர் சொல்ல
இன்னும் அதீத உத்வேகமாய் ஒடி வரும் உன் பிள்ளை நான்!

மேலும்

Pradeep - Pradeep அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
10-Mar-2020 6:19 pm

ஓசை

கடலின் அலை விடும் ஓசை
காற்றில் இழை படும் ஓசை
மேகங்கள் சண்டையிடும் ஓசை
மழை துளி தரை விழும் ஓசை
எத்தனையோ இன்ப  ஓசை 
என்றாலும் உன் இதய துடிப்பின் ஓசையே 
எனை உள்ளும் புறமும் 
அங்கம் அங்கமாய் மகிழ்வூட்டும்
அறியவியலாய் பொய் என்றாலும்
அன்பின் அறமாய் அது மெய்யே


மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே