மகளிர் தினம்
பிள்ளைகளை காக்கும் தாயை தெய்வம் என்றோ!
ஆண்கள் முன்னேற ஊக்கம் கொடுக்கும் சக்தி என்றோ!
கற்பினை காக்கும் புனிதம் என்றோ!
வீட்டினை காக்கும் தேவி என்றோ!
ஒழுக்கம் காக்கும் உயிர் என்றோ!
வகைப்படுத்தாமல்
அவள் மனித பிறப்பின் அனைத்து உணர்வுகளையும் உரிமைகளையும் உள்ளடக்கிய ஒரு பாலினம் என்ற அடிப்படை அறிவியல் ஏந்தி
உரிமைகளை சமமாக்கி!
உணர்வுகளை உரக்க பேசி!
கொண்டாடுவோம் சமத்துவமாக