வியந்த சோலை
அழகிய சோலை!
அவளுக்கு அங்கு என்ன வேலை!
அழகிய மயில்கள் கூடி
ஆடி ஓடி விளையாடும் மாலை!
அந்த இடம் தானே!
அவள் அங்குதானே இருப்பாள்!
வண்ணத்துப்பூச்சி ஒன்று
பூவின் இதழோரம் தேன் எடுக்க சென்று
தேனின் சுவையால் மதி தோற்று
மா விழியின் இதழ்களில் மயங்கி நின்றது
மான் கூட்டமோ மங்கை அவள்
தோல் கண்டு துவண்டு வீழுந்தது
புள்ளினங்கால்களோ அவளின் நீண்ட
புறம் கண்டு புறமுதுகிட்டு பறந்தது
சிங்கமும் புலியும் தன் இயல் மறந்து
அவளின் சிகை கண்டு ரசித்தது
பளிச்சிட்ட அவள் முகம் கண்ட
சூரியனோ மரக் கிளைகளின் மறைவில் கண்ணாமூச்சி ஆடியது
இதோ அவள் சென்ற அன்று
மொத்த சோலையும்
தன் வேலை மறந்து
அவள் மேலை ரசித்தது.