மனிதனுக்குப் பாடம்
ஆற்றல் மிகுந்த அலைகடலே
அடங்கிக் கிடப்பாய் நிலையாக,
ஏற்றம் வந்தால் மனிதனவன்
ஏதும் தெரியா தாடுகின்றான்,
கூற்றின் வரவு தெரியாதே
குற்றம் பலவும் செய்கின்றான்,
நேற்றுச் செய்தோர் இன்றில்லை
நெறியாம் பாடம் சொல்வாயே...!
ஆற்றல் மிகுந்த அலைகடலே
அடங்கிக் கிடப்பாய் நிலையாக,
ஏற்றம் வந்தால் மனிதனவன்
ஏதும் தெரியா தாடுகின்றான்,
கூற்றின் வரவு தெரியாதே
குற்றம் பலவும் செய்கின்றான்,
நேற்றுச் செய்தோர் இன்றில்லை
நெறியாம் பாடம் சொல்வாயே...!