ஏந்துவோம் சமூக விடுதலை

நீ இச்சாதி நான் அச்சாதி
நீ அப்பால் நான் இப்பால்
நீ அவ்வினம் நான் இவ்வினம்
நீ அம்மொழி நான் இம்மொழி
என்றோர் பிரிவினை இயல்பில்
உயர்வு தாழ்வு கற்பித்து
மனித விடுதலை மறந்து
அயர்ந்து உறங்கும்
உருண்டை பந்தின்
ஒப்பற்ற உயிரினம் நாம்.
என்று பேதங்கள் ஓய்ந்து
சமத்துவம் ஓங்குமோ
அன்று தானே ஏந்துவோம்
சமூக விடுதலையை.....

எழுதியவர் : (12-Mar-20, 4:48 pm)
சேர்த்தது : Pradeep
பார்வை : 600

மேலே