Rama Anandan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Rama Anandan
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  28-Jun-2021
பார்த்தவர்கள்:  150
புள்ளி:  7

என் படைப்புகள்
Rama Anandan செய்திகள்
Rama Anandan - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Jun-2021 9:24 am

ஒரு அன்னைக்கு பத்து மாதம் பிரசவ காலம்
ஒரு தந்தையின் பிரசவ காலம் ஆயுள் காலம்
அன்னை என்பவள் மரம் போல
தந்தை என்பவர் வேர் போல
மரத்தை அனைவரும் போற்றுகின்றோம்
வேர் ஒன்று இருப்பதை மறந்து விட்டோம்
வேர் என்ற ஒன்று இல்லை என்றால்
மரம் என்ற ஒன்று எங்கே வாழும்
வேர் செய்யும் தியாகம் தெரிவதில்லை
வேர் படும் வலிகள் அறிவதில்லை
எத்தனை தியாகம் செய்தாலும்
எத்தனை வலிதான் பட்டாலும்
வெளியில் தெரியாது வேர் தியாகம்
அன்னை பிரசவம் போன்ற உயிர்த் தியாகம்
வாழ்வில் நான் உயர அனுதினமும் உழைத்தாய்
அம்மா இருந்தாலும் நீயும் தான் என் தாய்
பட்டினி கண்டதில்லை நீ இருந்த வரையில்
நீதானே என்றென்றும் தியாகத்தின் புதையல

மேலும்

Rama Anandan - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Jun-2021 9:22 am

விடிகாலைப் பொழுது
இயற்கை அன்னையின் சிரித்த முகம்
எத்தனை குளுமை
எத்தனை இனிமை
பறவைகளின் சங்கீத கச்சேரிகள்
அலுவலகம் கிளம்பும் பறவையினம்
பழம் உண்ணும் அணில்
மரத்தின் மேலே அமர்ந்து கச்சேரி செய்யும் ஒலி
நீர் நிலையில் குளிக்கும் காக்கைகள்
உடலை சிலுப்பி நீர் உதறும் அழகு
அழகான அன்னப்பட்சிகள்
நீரில் செய்யும் காதல் லீலைகள்
மடி கனத்த பசுக்கள்
பால் பிழியும் பால்காரர்
அன்னையின் அரவணைப்பில் கன்றுகள்
பசுவின் பின்னே பால் பொலிவு
பசுவின் முன்னே பாச பொழிவு கன்றிடம்
கொக்கரிக்கும் கோழிகள் கோழி குஞ்சுகள்
மண்ணைக் கிளறி புழு உண்ணும் அழகு
எலி பிடிக்க பதுங்கும் பூனை குட்டி
பூனைக்கு போக்கு காட்டும் எலி குட்டி
விடியலுக்க

மேலும்

Rama Anandan - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Jun-2021 9:20 am

கடவுள் என்ன கடவுள்
என் அன்னைக்கு முன்னால்
என் அன்னை தானே கடவுள்
கடவுளும் அவள் பின்னால்
வயிற்றில் நான் இருக்கும் போதே
என் வளர்ச்சிக்கு மகிழ்ந்தவள்
வாயைக் கட்டி வயித்தைக் கட்டி
வலியோடு என்ன சுமந்தவள்
நான்கைந்து மாதத்தில் வாந்தியா எடுத்தாலும்
பித்த மிகுதியில் தலை தான் கிறுகிறுத்தாலும்
எந்தத் துன்பத்திலும் வெறுத்ததில்லை என்னை
கடவுளாய் நான் பார்க்கும் என்னுடைய அன்னை
தொந்தி தான் சரிய தன் அழகை எல்லாம் இழந்து
விரும்பிய உணவுகளை விருப்பமுடன் தவிர்த்து
வயிற்றில் என் அசைவுகளை மகிழ்வுடனே உணர்ந்து
மகிழ்ந்திருந்தால் என் அன்னை
மறக்க மாட்டேன் நான் உன்னை
மாதம் ஏழு ஆனபோது வளையல் காப்பு தரித்தாள்

மேலும்

Rama Anandan - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Jun-2021 9:16 am

கைப்பேசி
கையடக்க உலகமா
இல்லை
உள்ளங்கையில் அடங்கிய நரகமா
உலகமே நம் உள்ளங்கையில்
நாம் மட்டும் என்றும் தனிமையில்.
- இராம.ஆனந்தன்.

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே