அம்மா

கடவுள் என்ன கடவுள்
என் அன்னைக்கு முன்னால்
என் அன்னை தானே கடவுள்
கடவுளும் அவள் பின்னால்
வயிற்றில் நான் இருக்கும் போதே
என் வளர்ச்சிக்கு மகிழ்ந்தவள்
வாயைக் கட்டி வயித்தைக் கட்டி
வலியோடு என்ன சுமந்தவள்
நான்கைந்து மாதத்தில் வாந்தியா எடுத்தாலும்
பித்த மிகுதியில் தலை தான் கிறுகிறுத்தாலும்
எந்தத் துன்பத்திலும் வெறுத்ததில்லை என்னை
கடவுளாய் நான் பார்க்கும் என்னுடைய அன்னை
தொந்தி தான் சரிய தன் அழகை எல்லாம் இழந்து
விரும்பிய உணவுகளை விருப்பமுடன் தவிர்த்து
வயிற்றில் என் அசைவுகளை மகிழ்வுடனே உணர்ந்து
மகிழ்ந்திருந்தால் என் அன்னை
மறக்க மாட்டேன் நான் உன்னை
மாதம் ஏழு ஆனபோது வளையல் காப்பு தரித்தாள்
பரிவுடனே நெருங்கி வரும்
புருஷனையும் தவிர்த்தாள்
பக்குவமாய் தன்னுள்ளே என் உயிரை வளர்த்தால்
என்னுயிரை காத்திடவே பார்த்து பார்த்து நடந்தாள்
மாதம் 10 ஆனதடா நேரம் வந்து சேர்ந்ததடா
உயிர் துடித்து உயிர் கொடுக்கும் பிரசவத்தின் துவக்கம்
இடுப்பெலும்பு உடைவது போல்
உனக்கு தான் வலி எடுக்க
என்னை உலகில் புறம் தள்ளும்
போராட்டம் தான் நடக்க
வலியும் தாங்காமல் கண்ணில் நீரும் பெருகியதே
உலகில் நான் வந்து விழும் நேரமும் நெருங்கியதே
பனிக்குடமும் உடைந்து பூமியிலே நான் விழ
உன்னைப் பிரிந்த துயரத்தில் வீரிட்டு நான் அழ
உறவுகளும் மகிழ்ந்தன உலகமும் மகிழ்ந்தது
அத்தனை வலியிலும் உன் கேள்வி ஒன்று தான்
பிள்ளை ஆரோக்கியமா இருக்கா
என் பசி தீர்க்க உனக்கு உடனே
பால் அமுதம் சுரந்ததம்மா
பால் கொடுக்கும் வேலையிலும்
என் முகம் பார்த்து மகிழுந்தாயே
பட்ட வேதனைகள் தான் மறந்து சிரித்தாயே
இந்த உலகத்திற்கு நான் வர காரணம் நீ தாயே
என்றைக்கும் என் கடவுள் நீ தானே என் தாயே.

- இராம.ஆனந்தன்.

எழுதியவர் : இராம.ஆனந்தன் (28-Jun-21, 9:20 am)
சேர்த்தது : Rama Anandan
Tanglish : amma
பார்வை : 851

மேலே