அம்மா..!
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
அம்மாவிடம்
கோபமாக பேசிவிட்டு
அடுத்த நாள்
சிரித்துப் பேசி
உரையாடுவதிலும்...
அப்பாவிடம்
திட்டு வாங்கி விட்டு
அடுத்த நாள்
பாராட்டு வாங்கி
அனுபவிப்பதிலும்.....
தம்பியிடம்
தகராறு செய்துவிட்டு
அடுத்தநாள்
சமாதானம் செய்து
சேர்வதிலும்....
அக்காவிடம்
ஓரிரு மாதங்கள்
பேசாமல் இருந்து விட்டு....
அடுத்த மாதம்
சந்தித்து பேசுவதிலும் ....
தங்கையின் கோபத்திற்கு
காரணமாக இருந்து விட்டு...
அடுத்த நாள்
மகிழ்ச்சிக்கு காரணமாவதிலும் தான்
வாழ்க்கையின்
உயிரோட்டமே !
இருக்கிறது என்பதை
தனியாக சென்று
வாழும் போது
அறிந்து கொண்டேன்.....!!!
*கவிதை ரசிகன்*
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

