விடியல்

விடிகாலைப் பொழுது
இயற்கை அன்னையின் சிரித்த முகம்
எத்தனை குளுமை
எத்தனை இனிமை
பறவைகளின் சங்கீத கச்சேரிகள்
அலுவலகம் கிளம்பும் பறவையினம்
பழம் உண்ணும் அணில்
மரத்தின் மேலே அமர்ந்து கச்சேரி செய்யும் ஒலி
நீர் நிலையில் குளிக்கும் காக்கைகள்
உடலை சிலுப்பி நீர் உதறும் அழகு
அழகான அன்னப்பட்சிகள்
நீரில் செய்யும் காதல் லீலைகள்
மடி கனத்த பசுக்கள்
பால் பிழியும் பால்காரர்
அன்னையின் அரவணைப்பில் கன்றுகள்
பசுவின் பின்னே பால் பொலிவு
பசுவின் முன்னே பாச பொழிவு கன்றிடம்
கொக்கரிக்கும் கோழிகள் கோழி குஞ்சுகள்
மண்ணைக் கிளறி புழு உண்ணும் அழகு
எலி பிடிக்க பதுங்கும் பூனை குட்டி
பூனைக்கு போக்கு காட்டும் எலி குட்டி
விடியலுக்கு திருஷ்டி கழிக்கும் காக்கையின் கரையல்
நீல வானம் அதனிடையே ரேகை போல ஒரு ஒளிக்கீற்று
ஆதவனின் ஆனந்த தரிசனம்
மேகங்களிடையே சிறிது சிறிதாக வெளிவர
உலகத்தின் மொத்த அழகின் சிலிர்ப்பு
ஆண்டவன் படைப்பு
பனிபடர்ந்த புல்வெளி
புல் நுனியில் ஒரு பனித்துளி
சூரிய ஒளிபட்டு வைரமாய் மின்ன
மனதை கொள்ளை அடிக்கும் அழகு
கிணற்றில் நீர் இறைத்து
முகம் கழுவினால் இயற்கையின் குளுமை
இத்தனை அழகையும் ரசித்து
என் இணையாள்(மனைவி) தந்த தேனீர் ருசித்து
இந்த நாள் இனிய நாளாக அமைய
மனம் நிறைவாய் விடியலை வரவேற்கிறேன்
இனிதாக பொழுது புலர்ந்தது.
- இராம.ஆனந்தன்.

எழுதியவர் : இராம.ஆனந்தன் (28-Jun-21, 9:22 am)
சேர்த்தது : Rama Anandan
பார்வை : 73

மேலே