Renganathan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Renganathan
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  03-Jan-2019
பார்த்தவர்கள்:  21
புள்ளி:  0

என் படைப்புகள்
Renganathan செய்திகள்
Renganathan - எண்ணம் (public)
03-Jan-2019 1:37 pm


நீர்த்து விடுமோ...!!!

உனக்குள்ளும்
எனக்குள்ளும்
பகிர்ந்துகொள்ள மீதமிருப்பது
நம்
தேகத்தில் மறைந்திருக்கும்
மட்சங்களே யின்றி
வேறொன்றும்
இருந்திருக்க முடியாது...!

நம்
சந்திப்பின் அட்சாரமாய்
பரிமாறி கொண்ட
முத்தங்களை
நம்
உதடுகள் மட்டுமே
அறிந்திருக்க கூடும்
சில தருணங்களில்
நம்
வீட்டு கண்ணாடியும்!
அதிடம்
காட்டி தானே
நம் உதட்டின்
நலமறிந்து கொண்டோம் ..!


நீ
உதிர்த்து விட்டு போன
மயிரணுக்களை (முடிகளை)
சேமித்தேன்
சிறு தாலி யெனக்கு
கட்டிக்கொள்ள! நன்றி
சொல்லாத
நாளே யில்லை
பறித்து கொடுத்த
என்
வீட்டு சீப்பிற்கு..!
(மைகோதி! மயிர்க்கோதி!)

என்
மூச்சுக்காற்றின்
தட்பவெட்பத்தை
தலையசைக்கும் உன்
ஜிமிக்கி கம்மலரியுமே
மூச்சுகாற்றில் கலந்திருந்தது
காதலா! காமமா!

அறியா வகை அமிர்தமே
நானுனை நெருங்க
சொட்டும்
உன் வியர்வை
துளிகளை நானரு ந்த
தேனாக தித்திக்குமே ...!

உனக்கென்று ஒரு
மலரையும்
நான்
பரிசளித்ததாக நினைவில்லை
வாடும் மலரை கண்டு
நீயும் வாட கூடும் என்பதால்! 

பேழைக்குள் அடைபட்டு 
படபடக்கும் 
பட்டாம்பூச்சியாய்
படபடக்கிறாய்
நானுனை கைகளில்
ஏந்த..!!!

உன்
கால் விரல்கள் அறியுமே
சொடுக்கெடுக்கும் என்
கை விரல்களின்
மென்மையை..!

உன்
கைகளை போலவே
விழிகளும் என்னை
சிறை செய்யுமே
நானுனை நெருங்க...!

விரல்களை பூட்டி
விளையாடிய காலங்கள்
கனத்து போகத்தான்
செய்கிறது உனை
சுமந்து நடந்த
நிமிடங்களும் நீர்த்து
போக செய்கிறது
உன் பிரிவு ...!


>>>ரெங்கநாதன் >>>  

மேலும்

கருத்துகள்

மேலே