சாருமதி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : சாருமதி |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 21-Feb-2017 |
பார்த்தவர்கள் | : 50 |
புள்ளி | : 6 |
ஜல்லிக்கட்டு பற்றி கவிதைகள் சமர்ப்பிக்கவும்
கர்ணனை போல் கவச குண்டலத்துடன் பிறக்கவில்லை.
அவனுக்காவது அகற்றும் உரிமை அவனிடம் இருந்தது.
அகற்றும் உரிமையில்லை
மாற்றும் வரம் மட்டுமே உண்டு!
பெண்மகளாய் பிறந்துவிட்டேன்!
அலங்காரமோ ?
அடையாளமோ?
அன்றி பெண்மையின் பாதுகாவலோ?
ஆடைகளில் எப்போதும் கவனம்.
பெண்மகளாய் வளர்ந்துவிட்டேன்!
சிறுவயது விளையாட்டு சாமான்களும்
சமையல் பாத்திரங்களின் சிறுவடிவம் தான்
பெண்மகளாய் பிறந்துவிட்டேன்!
ஆண்மகனின் குழந்தைப்பருவம் முதல் இளமைப்பருவம் வரை விளையாட்டுகள் வளரும்.
எனக்கோ வீட்டுவேளைகள் வளரும்.
பெண்மகளாய் வளர்ந்துவிட்டேன்!
சிலர் மனக்கட்டுபாட்டின் குறைப்பாட்டிற்கு
எனக்குதான் சட்டதிட்டங்கள்
பெண்மகளாய் பிறந்
பலன் நோக்கி உதவி
புண்ணியங்கோரா ஈகை
பாவம் தவிர்க்க எண்ணா இரக்கம்
பார்ப்பது அரிது.
பூலோகத்தின் அதிசயம் என்பதால் அல்ல!
மனித செயல்களில் அபூர்வம் என்பதால்...
வீரமென்றும்
தீரமென்றும்
கூர்விழி மங்கையர் காதலுக்கென்றும் வீரங்கொண்ட இளங்காளையர்
ஏறுதழுவி நின்றனரே!
ஊடலுக்கு பின்படைந்த கூடல் போல
தேடலுக்கு பின்புணர்ந்த காதல் போல
விரட்டு, விரட்டு மஞ்சு விரட்டு என்றனரே!
நெஞ்சு நிறைய ஆர்வங்கொண்டு
மிஞ்சும் காளை திமிலின் கர்வம்கொன்று
அஞ்சி மிரண்ட பிள்ளையை
கொஞ்சி தன்புறஞ்சேர்த்தது போல்
என்றும் 'என் நண்பன் 'நீ
உன் 'அன்பன் 'நானென்று
பலநூறு ஆண்டு நட்பினை
மரபாய் மரபணுவில் ஏற்றி
'கலாச்சாரம் 'என்று கூவி தமிழறம் வளர்த்தனரே!
பலன் நோக்கி உதவி
புண்ணியங்கோரா ஈகை
பாவம் தவிர்க்க எண்ணா இரக்கம்
பார்ப்பது அரிது.
பூலோகத்தின் அதிசயம் என்பதால் அல்ல!
மனித செயல்களில் அபூர்வம் என்பதால்...
விழிகளாய் நீயிருக்க
இமைகளாய் நானிருக்க விரும்புகிறேன்
அப்போதுதான் நீயறியா வண்ணம்
நொடிக்கொருமுறை உன்னை அணைக்க முடியும் .
இரவுகளில் என் பாதுகாப்பில் நீ உறங்க முடியும்.