பெண்மகளாய்

கர்ணனை போல் கவச குண்டலத்துடன் பிறக்கவில்லை.
அவனுக்காவது அகற்றும் உரிமை அவனிடம் இருந்தது.
அகற்றும் உரிமையில்லை
மாற்றும் வரம் மட்டுமே உண்டு!
பெண்மகளாய் பிறந்துவிட்டேன்!
அலங்காரமோ ?
அடையாளமோ?
அன்றி பெண்மையின் பாதுகாவலோ?
ஆடைகளில் எப்போதும் கவனம்.
பெண்மகளாய் வளர்ந்துவிட்டேன்!
சிறுவயது விளையாட்டு சாமான்களும்
சமையல் பாத்திரங்களின் சிறுவடிவம் தான்
பெண்மகளாய் பிறந்துவிட்டேன்!
ஆண்மகனின் குழந்தைப்பருவம் முதல் இளமைப்பருவம் வரை விளையாட்டுகள் வளரும்.
எனக்கோ வீட்டுவேளைகள் வளரும்.
பெண்மகளாய் வளர்ந்துவிட்டேன்!
சிலர் மனக்கட்டுபாட்டின் குறைப்பாட்டிற்கு
எனக்குதான் சட்டதிட்டங்கள்
பெண்மகளாய் பிறந்துவிட்டேன்!
இருப்பினும் என்ன?
என்னால்தான் சுமக்கத் முடியுமே!
சட்டங்களை ,கடமைகளை
அன்பினை ,பண்பிணை
தாய்மை உணர்வினை பிற
எனக்குத்தான் பரப்ப தெரியுமே!
பிறர்நலம் போற்றுதலை
மகிழ்ச்சிதனை
உலக நன்மைகளை
பெண்மகளாய் வளர்ந்துவிட்டேன்!!

எழுதியவர் : சாருமதி (8-Mar-17, 10:26 pm)
சேர்த்தது : சாருமதி
பார்வை : 67

மேலே