Siva K Sankar - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Siva K Sankar |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 05-Aug-2017 |
பார்த்தவர்கள் | : 40 |
புள்ளி | : 4 |
நித்திரையில் எனக்கோர்
நீண்ட நேர போராட்டம்..
கண் மூடினால்
கனவாக நீ..!
கண் விழித்தால்
நினைவாக நீ..!
ஏனென்று புரியாமல்
இழந்துவிட்டேன் நித்திரையை..!
காரணங்கள் தெரியாமலே
காலத்தை கடத்தி விட்டேன்...!
கனவில் தான் வருவேனென்றால்
கண் மூடியே கிடந்திருப்பேன்...
நினைவில் தான் நிற்பேனென்றால்
நிச்சயமாய் விழித்திருப்பேன்....
இரண்டிலுமே வருவதனால்
இவ்வுலகத்தையே மறந்து விட்டேன்..!
நீயே என்
உயிரென்றாய்! என்
நினைவுகளே உன்
உறக்கமென்றாய்!
நிலநீர் அழிந்தினும்
நாமென்றும் பிரியோமென்றாய்! இவை
நிகழாத மறுநொடியில்
நின்முன் தன் மரணமென்றாய்!
எழுதிய ஏட்டின்
பக்கங்கள் முடியுமுன்
எழுத்துக்கள் மறைந்தனவே!
நிகழ்வெல்லாம் என்
நினைவுகளில்
நிற்க வைத்து, நீ
நின்றாய் வேறொரு
நிழற்குடையில்!
இழப்பெல்லாம் நம்
இதயத்துள்ளே இருக்க, நாம்
இணையா போதும்
இரண்டாய் துடிக்கிறது என்
இதயம் மட்டும்,
இன்றும் உனக்காகவும்!
பாவம்...
அதற்கென்ன தெரியும்?
பழகியது
பார்வைகள் தானே....!
நீயே என்
உயிரென்றாய்! என்
நினைவுகளே உன்
உறக்கமென்றாய்!
நிலநீர் அழிந்தினும்
நாமென்றும் பிரியோமென்றாய்! இவை
நிகழாத மறுநொடியில்
நின்முன் தன் மரணமென்றாய்!
எழுதிய ஏட்டின்
பக்கங்கள் முடியுமுன்
எழுத்துக்கள் மறைந்தனவே!
நிகழ்வெல்லாம் என்
நினைவுகளில்
நிற்க வைத்து, நீ
நின்றாய் வேறொரு
நிழற்குடையில்!
இழப்பெல்லாம் நம்
இதயத்துள்ளே இருக்க, நாம்
இணையா போதும்
இரண்டாய் துடிக்கிறது என்
இதயம் மட்டும்,
இன்றும் உனக்காகவும்!
பாவம்...
அதற்கென்ன தெரியும்?
பழகியது
பார்வைகள் தானே....!
இதயத்தை
ஈடு வைத்தேன்
காதலுக்காக, என்
காதலியிடம்!
ஈவு கிடைத்தது
காதலாக,
மீதி என்னவோ
இன்றும் அவள்
நினைவாக...!
விடியலே தெரியாமல்
விளக்கைச் சுற்றும்
விட்டில் பூச்சிகளாய்
உன்னையே சுற்றி
உயிரை விடுகின்றன,
என் கனவுகள்...
காதலைச் சுமக்கும்
இதயத்தை விட, என்
கவிதைகளைச் சுமக்கும்
காகிதங்களும்,
கனவுகளைக் கடத்தும்
இரவுகளும், அவள் -
நினைவுகள் வருத்தும்
பொழுதுகளும் தான் பாவம்!
இவைகளுக்குத்தான்,
வலியில் துடிக்கக் கூட
வழியில்லை!