பாவம்

நீயே என்
உயிரென்றாய்! என்
நினைவுகளே உன்
உறக்கமென்றாய்!
நிலநீர் அழிந்தினும்
நாமென்றும் பிரியோமென்றாய்! இவை
நிகழாத மறுநொடியில்
நின்முன் தன் மரணமென்றாய்!
எழுதிய ஏட்டின்
பக்கங்கள் முடியுமுன்
எழுத்துக்கள் மறைந்தனவே!
நிகழ்வெல்லாம் என்
நினைவுகளில்
நிற்க வைத்து, நீ
நின்றாய் வேறொரு
நிழற்குடையில்!
இழப்பெல்லாம் நம்
இதயத்துள்ளே இருக்க, நாம்
இணையா போதும்
இரண்டாய் துடிக்கிறது என்
இதயம் மட்டும்,
இன்றும் உனக்காகவும்!
பாவம்...
அதற்கென்ன தெரியும்?
பழகியது
பார்வைகள் தானே....!

எழுதியவர் : சிவசங்கர்.K (12-Aug-17, 6:15 am)
Tanglish : paavam
பார்வை : 165

மேலே