Sridharan - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Sridharan |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 12-Nov-2017 |
பார்த்தவர்கள் | : 148 |
புள்ளி | : 43 |
வானத்து நிலவின் அழகை ரசித்து
அதை என்னிடம் காட்டியது
நிரம்பிய கிணற்றில் நிலவின் பிம்பம்
இந்த உலகத்திலேயே இருக்கத்தான் ஆசை
ஆனால்
இதே உலகில்தான் மரணமும் இருக்கிறது
இருள் சூழ்ந்த உலகு
மேற்கில் சூரியன் மறைந்துவிட்டான்
வேலைகள் யாவும் முடிவடைந்தன
காதல் பிறக்கும் நேரம் இது
அளவில்லா காதல் பிறக்கும் நேரம்
எதிர்பார்ப்புகள் இல்லை
ஆனால் காதலால் உண்டான காமம் இருக்கிறது
விடியும்வரை காமக்காதல்
விடிந்த பின் காமம் இல்லை
ஆனால் காதல் மட்டும் தொடர்கிறது
இது இளமையின் கனவு
முடிவடையாத உறவு
முதுமையிலும் தொடரும் நினைவு
இது முடிவிலா பெருவெளி
அளவிலா காதல் வெளி
மலரைக் கண்டேன்
மனம் மயங்கினேன்
உனை நோக்கவே
எனை மறந்தேன்
நீ மலரெனில்
நான் யார்
உன் நினைவே
எனை ஆள்கிறது
என் ஜீவன்
உனை நாடுகிறது
என்னை திருப்பித் தந்துவிடு
ஏனெனில் காதல் நோயின்
கனம் தாங்க முடியவில்லை
ரோஜா....!!
என் ரோஜா...!!
என்னதான் செய்ய முடியும்
ஒரு ஏழை விவசாயியால்...
தன் கண்ணீர் பூக்களை கொண்டு
மாலை தொடுத்து
தனக்குத் தனே சூடிக்கொள்ளவதை விட
அவனை பற்றிய இந்த விடையத்தை
யாரிடமும் சொல்லாதே என்ற பின்னே
ரகசியங்கள் பிறக்கின்றன
அவனை பற்றிய ரகசியம் என்பதால்
அவனை சந்திக்கும் ஒவ்வொரு நொடியும்
நான் அவனை ஒரு கூண்டில் அடைத்து வைக்கிறேன்
இப்படி இருக்க
அவனது ஒரு சிறிய அசைவும் கூட
என்னை விட்டு தப்பியதில்லை
இதில்
நான் ஒரு துப்பறிவாளனோ
என்ற சந்தேகம் கூட பிறக்கிறது
என் ரகசிய அறையில்
ரகசியத்தை காக்கும் கவனத்தில்
என்னையே நான் இழக்கிறேன் என்றுதான் சொல்லவேண்டும்
ஏனெனில்
என் கண்களே காட்டி விடுகிறதே
என்னிடம் ஏதோ ஒளிந்திருக்கிறதென்று
ரகசியங்கள் அடுத்தவரை நாம் அறியும் ஞான விடுதலை என்றிருந்தேன்
பின்பே உணர்கிறேன் அது ஒரு தடை என்று
நம்மையே நாம் சிறை
மண்ணுக்குச் சொந்தக்காரன்
அந்த மண்ணில் பிறந்தவன் மட்டும் அல்ல
உண்மையான சொந்தக்காரன்
மண்ணின் சாரத்தை உணவாக்குபவன்(விவசாயி)
அவனது தற்கொலைகள்
உயிரை உடல் துறக்கும் முயற்சிமட்டும் அல்ல
மண் தன் ஆத்மாவை இழப்பதும்தான்
சலிப்படைத்திருந்தேன் தனிமையில்
மீளா துயரோ என்றும் கவனித்திருந்தேன்
நல்ல வேளை
நீண்ட நாட்கள் தொடர்பில் இல்லாத
நண்பனின் தேடல்
என் வீட்டு வாசலை
வந்தடைந்தது
மறந்து தொலைந்திருந்த
அழகிய நினைவுகள்
நழுவாமல் பிடிபட்டன
முற்றிலும் இல்லை என்றாலும்
தற்காலிகமாய் அகப்படவில்லை
என்னை எனக்கே அந்நியனாக்கிய
தனிமைகள் பொழுதுகள்