இது காதல் காலம்
இருள் சூழ்ந்த உலகு
மேற்கில் சூரியன் மறைந்துவிட்டான்
வேலைகள் யாவும் முடிவடைந்தன
காதல் பிறக்கும் நேரம் இது
அளவில்லா காதல் பிறக்கும் நேரம்
எதிர்பார்ப்புகள் இல்லை
ஆனால் காதலால் உண்டான காமம் இருக்கிறது
விடியும்வரை காமக்காதல்
விடிந்த பின் காமம் இல்லை
ஆனால் காதல் மட்டும் தொடர்கிறது
இது இளமையின் கனவு
முடிவடையாத உறவு
முதுமையிலும் தொடரும் நினைவு
இது முடிவிலா பெருவெளி
அளவிலா காதல் வெளி