ரகசியம் சொல்லுவதென்ன

அவனை பற்றிய இந்த விடையத்தை
யாரிடமும் சொல்லாதே என்ற பின்னே
ரகசியங்கள் பிறக்கின்றன

அவனை பற்றிய ரகசியம் என்பதால்
அவனை சந்திக்கும் ஒவ்வொரு நொடியும்
நான் அவனை ஒரு கூண்டில் அடைத்து வைக்கிறேன்

இப்படி இருக்க
அவனது ஒரு சிறிய அசைவும் கூட
என்னை விட்டு தப்பியதில்லை

இதில்
நான் ஒரு துப்பறிவாளனோ
என்ற சந்தேகம் கூட பிறக்கிறது
என் ரகசிய அறையில்

ரகசியத்தை காக்கும் கவனத்தில்
என்னையே நான் இழக்கிறேன் என்றுதான் சொல்லவேண்டும்
ஏனெனில்
என் கண்களே காட்டி விடுகிறதே
என்னிடம் ஏதோ ஒளிந்திருக்கிறதென்று

ரகசியங்கள் அடுத்தவரை நாம் அறியும் ஞான விடுதலை என்றிருந்தேன்
பின்பே உணர்கிறேன் அது ஒரு தடை என்று
நம்மையே நாம் சிறை பிடித்திருக்கிறோம் என்று..!!

எழுதியவர் : ஸ்ரீதரன் (1-Mar-21, 9:32 am)
சேர்த்தது : Sridharan
பார்வை : 252

மேலே