யாருக்கு யார் துணை
இரண்டு ஜீவன்களின்
"நடைப்பயிற்சி" யை
வீதியில் கண்டேன்...!!
ஒன்று
ஆறறிவு ஜீவன்
மற்றொன்று
ஐந்தறிவு ஜீவன்...!!
ஐந்தறிவு ஜீவனின்
கழுத்தில் கட்டப்பட்ட
கயிற்றின் ஒரு முனை
ஆறறிவு ஜீவன் கையில்...!!
ஐந்தறிவு ஜீவன்
முன்னே செல்ல
ஆறறிவு ஜீவன்
பின்னால் செல்ல
அருமையான
நடைப்பயிற்சி...!!
இதில் யாருக்கு யார்
துணை என்று
சிந்தித்தேன்...
எனக்கு புரியவில்லை
புரிந்தவர்கள் சொன்னால்
நானும் புரிந்து கொள்வேன்...!!
--கோவை சுபா