அனைவரும் அளவின்றி

மீனைப் பிடிச்சு வறுக்கிறோம்
மானைப் பிடிச்சு அறுக்கிறோம்
ஆடுமாடு கோழியென அத்தனை
இனங்களை கொலை செய்தே
அனைவரும் அளவின்றி புசிக்கிறோம்
ஒவ்வொரு உண்ணும் நேரத்திலும்
ஊனின் உணவினை கேட்கிறோம்
கருவில் காரம் மிளகிணைத்து
ஒருபுறம் அனலிட்டு உண்கிறோம்
இறைவன் உயிர்பலி கேட்டதாக
இல்லாத பலகதை எழுதிவைத்து
இதயத்தில் பயமின்றி வெட்டுகிறோம்
இறந்ததை பதந்செய்து விற்கிறோம்
மனிதன் என்னும் கீழ்நிலையின்
மிருக அறிவின் வளர்ச்சியால்
மாண்பான உயிர்கள் சிதையுதைய்யா
மாற்றம் வந்தால் மட்டுந்தான்
மண்ணின் மகத்துவம் திரும்பவரும்.
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (1-Mar-21, 12:30 pm)
சேர்த்தது : நன்னாடன்
Tanglish : anaivarum alavinri
பார்வை : 69

மேலே