இணையதளம் எந்நேரமும்

எண்ணிலக்க (Digital) இந்தியா பீடுநடையோடு
எல்லோரும் கணிப்பொறியின் முன் கவலையோடு
இணையதளம் எந்நேரமும் கடும் தடையோடு
கருக்காய் முடிய வேண்டியவைகள் காலதாமதமாய்
அரைமணி நேரத்தில் முடிந்த பணிகள் பல மணியாய்
யாவரும் வங்கி வாசலில் பரதேசியாய் அட்டையோடு
நியாய விலைக்கடை முன்பெங்கும் ரேகை அழிந்த
முதியோர்கள் ரேகை கொடுக்கவே ஏக்கத்தோடு
வங்கிகள் யாவும் குறைந்தபட்ச தொகை இல்லையென
முதியோர் உதவித் தொகையிலே தண்டம் வசூலிப்பில்
விபத்தில் உயிர் இழந்தால் குடும்பம் வாழ காப்பீட்டில்
சேமித்தால் அதற்கு சேவை வரியென ஒன்றையும்
அஞ்சலகத்தில் அணு அணுவாய் சேமித்த பணத்தை
ஆபத்தில் எடுப்பதற்கு அளவில்லா கட்டுபாடுகள்
விதித்து மக்களை விதிர்விதிர்க்க வைத்ததே நவீனமாம்.
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (27-Feb-21, 7:04 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 29

மேலே