எனக்கு நானே

உன்னை பார்க்கிறேன் என
உனக்கு நன்றாகத் தெரியும்
பின் ஏன் பின் வாங்குகிறாய்
உன்னை நான் கேட்பது
பிரியமுடன் உன்னிடம் பேச அல்ல
சகஜமாய் பழக
இருவரும் பழகிக்கொள்ளக் கூடாதா...
வேறுபாடுகள் அறியாதவளா நீ
நீயே அச்சப் பட்டால் எப்படி
மறந்து விடாதே
பெண்ணுக்கும் வீரம் உண்டென்று
தவறானவனை வெட்டி விடுவோம் என்று

உன் சுயரூபத்தை காட்ட ஏன் தயங்குகிறாய்
பகுத்தறிவு பழகு

சரி சரி
கல்லூரிக்கு நேரமாகிறது
ஐயோ...!! மேற் சொல்லிக் கொண்டவை மறக்கக்கூடதே....!!

அம்மா நான் கிளப்புறேன்.....டாடா.....

எழுதியவர் : (27-Feb-21, 10:04 am)
சேர்த்தது : Sridharan
Tanglish : enakku naaney
பார்வை : 63

மேலே